"அமெரிக்காவுக்கு உரிமை இருக்கும்போது இந்தியாவுக்கு ஏன் தடை? ரஷ்ய எண்ணெய் கொள்முதல் குறித்து புதின் கேள்வி!
அமெரிக்காவுக்கு ரஷ்யாவின் எண்ணெய் வாங்க உரிமை இருக்கும்போது, இந்தியாவுக்கு ஏன் அந்த உரிமை இருக்கக் கூடாது என்று புதின் கேள்வி எழுப்பினார்.
டெல்லியில் நடைபெற்ற இந்தியா - ரஷ்யா இடையேயான 23-வது மாநாட்டைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் கூட்டாகச் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது, ரஷ்ய எண்ணெய் கொள்முதல் விவகாரத்தில் அமெரிக்காவைச் சுட்டிக்காட்டிப் புதின் முக்கியக் கேள்வி எழுப்பினார்.
ரஷ்ய அதிபர் புதின் செய்தியாளர் சந்திப்பின் இறுதியில் பேசியபோது, ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதல் குறித்து கேள்வி எழுப்பினார்.
அமெரிக்காவுக்கு ரஷ்யாவின் எண்ணெய் வாங்க உரிமை இருக்கும்போது, இந்தியாவுக்கு ஏன் அந்த உரிமை இருக்கக் கூடாது என்று புதின் கேள்வி எழுப்பினார். அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார். பிரதமர் மோடி பேசுகையில், பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியா - ரஷ்யா இடையேயான ஒற்றுமையை வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: இனி கவலையில்லை! ரயில்வேயை நோக்கி படையெடுத்த பயணிகள்: விரைந்து செயல்பட்ட இந்திய ரயில்வே!
பயங்கரவாதத்தை எதிர்க்க உலகளாவிய ஒற்றுமை தேவை என்று வலியுறுத்தினார். "பகல்காம் தாக்குதலாகட்டும் அல்லது குரோக்ஸ் நகரக் கோழைத்தனத் தாக்குதலாகட்டும், அனைத்திற்கும் பயங்கரவாதமே காரணம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும் ரஷ்யாவும் தோளோடுதோள் நின்று வருகின்றன," என்று அவர் உறுதி அளித்தார்.
ரஷ்ய அதிபர் புதின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்துப் பேசுகையில் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அணுமின் நிலையத் திட்டங்கள் இந்தியாவின் தொழில்கள் மற்றும் வீடுகளுக்கு மலிவான, சுத்தமான மின்சாரத்தைத் தரும் என்றும், 6 அணு உலைகளில் ஏற்கனவே 2-ல் மின் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யா, பெலாரஸில் இருந்து இந்தியப் பெருங்கடல் வழியே சர்வதேச வடக்கு - தெற்கு போக்குவரத்து வழித்தடம் தொடங்கப்படும் என்று புதின் அறிவித்தார். புதிய சர்வதேச போக்குவரத்து மற்றும் தளவாட வழித்தடங்களை உருவாக்க இணைந்து செயலாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்தாண்டு இந்தியா - ரஷ்யா வர்த்தக வருவாய் 12 சதவீதம் அதிகரித்துச் சாதனை படைத்துள்ளது. நடப்பாண்டிலும் இரு தரப்பு வர்த்தகம் 100 பில்லியன் டாலர் அளவுக்கு இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா - ரஷ்யா இடையே சுதந்திர வர்த்தக மண்டலத்தை உருவாக்குவது வணிக வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆசிட் வீச்சு வழக்கில் 16 ஆண்டுகள் தாமதம்: "இது நாட்டிற்கே அவமானம்!" - உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!