×
 

ட்ரம்ப் வரி! மோடிக்கு தோள் கொடுக்கும் புடின்! இந்தியாவின் இழப்பை ரஷ்யா சமப்படுத்தும்!

அமெரிக்க வரி விதிப்பால், இந்தியாவுக்கு ஏற்படும் இழப்புகளை, ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதன் மூலம் சமப்படுத்தப்படும் என அதிபர் விளாதிமீர் புதின் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த கூடுதல் வரிகளால் இந்தியாவுக்கு ஏற்படும் இழப்புகளை, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதன் மூலம் சமநிலைப்படுத்த முடியும் என ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்துள்ளார். 

இந்தியா-ரஷ்யா இடையிலுள்ள வர்த்தக ஏற்றத்தாழ்வை (trade imbalance) நீக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு ரஷ்ய அரசுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். வரும் டிசம்பர் 5ஆம் தேதி இந்தியா வரவிருக்கும் புதின், தனது வருகைக்கான எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி, இரு நாடுகளின் உறவுகள் அடுத்த கட்டத்தை அடையும் எனக் கூறியுள்ளார்.

தெற்கு ரஷ்யாவின் கருங்கடல் தீவுப் பகுதியான சோச்சியில், இந்தியா உட்பட 140 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு மற்றும் புவிசார் அரசியல் நிபுணர்களின் சர்வதேச வால்டாய் கலந்துரையாடல் கூட்டத்தில் புதின் பேசினார். அமெரிக்காவின் அழுத்தத்தை புறக்கணித்து ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைத் தொடரும் இந்தியாவின் முடிவைப் பாராட்டினார். 

இதையும் படிங்க: என்ன பண்ணாலும் நடக்காது ராஜா! அமெரிக்காவின் திட்டம் தவிடுபொடி! ரஷ்யா சுளீர் பதில்!

"அமெரிக்காவின் வரி அழுத்தங்களால் இந்தியா சந்திக்கும் இழப்புகள், ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியால் சமநிலைப்படுத்தப்படும். இது இந்தியாவுக்கு இறையாண்மை கொண்ட நாடாக கௌரவத்தைப் பெறச் செய்யும்" எனத் தெரிவித்தார். இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி, 2025 ஜனவரி-ஜூலை வரையில் தினமும் 1.73 மில்லியன் பீல்கள் என அளவிடப்பட்டுள்ளது, இது இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 37%ஐ உள்ளடக்கியது.

ரஷ்யா-இந்தியா உறவுகள் சோவியத் யூனியன் காலத்திலிருந்தே சிறப்பாக உள்ளன என நினைவூட்டிய புதின், "இரு நாடுகளுக்கும் இடையே ஒருபோதும் பிரச்சினை அல்லது பதற்றம் இல்லை. இந்திய மக்கள் இதை நினைவில் கொண்டு மதிக்கின்றனர். இந்தியா அதை மறக்கவில்லை" எனக் கூறினார். 

பிரதமர் நரேந்திர மோடியை "சமநிலையான, ஞானமான, தேசிய சார்ந்த தலைவர்" எனப் பாராட்டிய அவர், வர்த்தக ஏற்றத்தாழ்வை நீக்க, ரஷ்யா இந்தியாவிலிருந்து அதிக அளவு விவசாயப் பொருள்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்யலாம் என வலியுறுத்தினார். இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி, உக்ரைன் போருக்குப் பின் 0.2%லிருந்து 40%ஆக உயர்ந்துள்ளது, இது இந்தியாவுக்கு பில்லியன் டாலர்கள் சேமிப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதினின் இந்திய வருகைக்கு முன், இரு அரசுகளின் குழுக்கள் கூட்டம் மற்றும் ராணுவ-ராணுவத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு கூட்டம் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டங்களின்போது, பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு, புதினின் வருகையின்போது கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அமெரிக்காவின் 50% வரி (அடிப்படை 10%க்கு மேல் 40% கூடுதல், ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்காக) இந்திய ஏற்றுமதியைப் பாதித்தாலும், ரஷ்யாவுடனான நெருக்கம் அதிகரிப்பதால், இரு நாடுகளின் உறவுகள் புதிய உச்சத்தை அடையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: காருக்குள் 45 நிமிட உரையாடல்!! அப்படி என்ன தான் பேசுனீங்க?! புடின் கொடுத்த ரிப்ளை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share