×
 

அமித்ஷா பேச்சால் நேரு குடும்பமே குழம்பி போயிருக்கு! ராகுல்காந்தியை வச்சு செய்யும் பாஜக!

''உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சால் முழு நேரு குடும்பமும் குழப்பத்தில் மூழ்கியது'' என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

புதுடெல்லி, டிசம்பர் 11: குளிர்கால பாராளுமன்றக் கூட்டத்தொடரில் நேற்று தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த விவாதம் நடந்தது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “சுதந்திர இந்தியாவின் முதல் ஓட்டு திருட்டு நேருவால் நடந்தது” என்று காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார். 

இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உடனடியாக எதிர்வினை ஆற்றி வாக்குவாதம் செய்தார். இன்று நிருபர்களிடம் ராகுல், “என் சவாலுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் அமித் ஷாவிடம் பதிலே இல்லை” என்று கூறினார். அதற்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், “அமித் ஷாவின் பேச்சால் முழு நேரு குடும்பமும் குழப்பத்தில் மூழ்கியது” என்று பதிலடி கொடுத்தார்.

நேற்றைய விவாதத்தில் அமித் ஷா, காங்கிரஸின் கடந்தகாலத்தில் நடந்த மூன்று “ஓட்டு திருட்டு” சம்பவங்களை எடுத்துக் காட்டினார். பிரதமர் பதவிக்கு சர்தார் படேல் அதிக வாக்கு பெற்றும் நேரு பிரதமரானது, இந்திரா காந்தியின் ரே பரேலி தோல்விக்குப் பின் அவசர நிலை கொண்டு வந்தது, சோனியா காந்தி குடியுரிமை பெறுவதற்கு முன்பே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டது ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார். இதனால் காங்கிரஸ் எம்பிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இதையும் படிங்க: மோடியின் அறைக்கே சென்ற ராகுல்காந்தி!! அமித் ஷா கலந்து கொண்ட மீட்டிங்!! பரபரக்கும் டெல்லி!

இன்று நிருபர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது: “எஸ்ஐஆர் விவாதத்தில் நான் இடைமறித்துப் பேசியதும் அமித் ஷா பதற்றமடைந்தார். தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். என் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமோ பதிலோ தரவில்லை. நாங்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் ஓட்டு திருட்டு ஆதாரங்களை வெளியிட்டோம். அமித் ஷாவை நேரடி விவாதத்துக்கு அழைத்தேன். ஆனால் அவரிடம் எந்தப் பதிலும் இல்லை.”

இதற்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பதிலளித்தார்: “பிரதமரும் அமித் ஷாவும் பேசும்போது ராகுல் வெளிநடப்பு செய்கிறார். இதுதான் அவரது ஜனநாயகம். உண்மையை எதிர்கொள்ள வலிமை இல்லை. அமித் ஷாவின் பேச்சால் முழு நேரு குடும்பமும் குழப்பத்தில் மூழ்கியது.”

இந்த வாக்குவாதம் பாராளுமன்றத்தையும் அரசியல் வட்டாரத்தையும் பரபரப்பாக்கியுள்ளது. காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளில் ஓட்டு திருட்டு நடப்பதாகக் குற்றம் சாட்டி வரும் நிலையில், அமித் ஷா காங்கிரஸின் கடந்தகாலத்தைத் தோண்டியெடுத்து பதிலடி கொடுத்துள்ளார். இது இரு கட்சிகளுக்கும் இடையிலான மோதலை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

இதையும் படிங்க: இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவு!! பாகிஸ்தான் மீனவர்கள் 11 பேர் கைது! கடலோர காவல்படை அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share