×
 

டிரம்பை யாரு பஞ்சாயத்து பண்ண கூப்பிட்டது? இந்தியா - பாக். போர் விவகாரத்தில் ராகுல் கேள்வி!!

இந்தியா - பாகிஸ்தான் இடையே டிரம்பை மத்தியஸ்தம் செய்ய சொல்லியது யார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. இதனால் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது. இந்த சூழலில் இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் இருநாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவியது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. அமெரிக்கா மத்தியஸ்தம் செய்து இரு நாடுகள் இடையே போர் நிறுத்த உடன்பாட்டை எட்டின.

இதுக்குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளது. உங்கள் ராணுவம் மீது தாக்குதல் நடத்தவில்லை. என்று பாகிஸ்தானுக்கு மெசேஜ் அனுப்பியிருந்தோம். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு தெளிவுபடுத்தி போர் பதற்றம் ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே தகவல் சொன்னோம் என்றார். இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கடுமையான கேள்வியை முன் வைத்து வருகின்றன. நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தாக்குதலுக்கு முன்பாகவே பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவித்தது குற்றம். இதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். இப்படி ஒரு முடிவை யார் அங்கீகரித்தார். இதனால் நம் விமானப்படை எத்தனை விமானங்கள் இழந்தன என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதையும் படிங்க: பொற்கோவில் குறித்து வெடித்த புதிய சர்ச்சை.. இந்திய ராணுவம் விளக்கம்!!

இதற்கு விளக்கம் அளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சரின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பாக மெசேஜ் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த மெசேஜ் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதாக புரிந்து கொள்ளப்படுவது தவறு என்று தெரிவித்திருந்தது. இதுகுறித்து மீண்டும் கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் மௌனம் மிகவும் மோசமானது. நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தெரிந்ததால் நாம் எத்தனை விமானங்களை இழந்தோம். இது தவறு மட்டுமல்ல. இது குற்றம் என்று சாடியிருந்தார்.

இதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் தள பக்கத்தில் இந்தியா - பாகிஸ்தான் போரில் அமெரிக்காவின் மத்தியஸ்தம், அதிபர் டொனால்ட் டிரம்பின் பங்கு உள்ளிட்டவை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜெய்சங்கர் தடுமாறுவது போன்ற வீடியோ வெளியிட்டு, இவரின் பேச்சில் ஏன் இவ்வளவு தடுமாற்றம் என்று கேள்வி எழுப்பிப்பட்டது. தற்போது அந்த பதிவை ரீ - போஸ்ட் செய்துள்ள ராகுல் காந்தி, பாகிஸ்தானுடன் திடீர் இணக்கம் காட்டியது ஏன்? பாகிஸ்தானை கண்டிக்கும் நடவடிக்கையில் ஒரு நாடு கூட இந்தியாவை ஆதரிக்கவில்லை, இந்தியா - பாகிஸ்தான் இடையே டிரம்பை மத்தியஸ்தம் செய்ய சொல்லியது யார்? இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சீர்குலைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: துருக்கி ஏவியேஷன் நிறுவனத்துக்கு பெரிய ஆப்பு... பாதுகாப்பு அனுமதியில் கை வைத்த மத்திய அரசு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share