×
 

என் வாழ்நாளில் இப்படி பார்த்தே இல்லை! வியந்து போன ராகுல்காந்தி! அந்தமான் தீவில் இருந்து வெளியிட்ட வீடியோ!

என் வாழ்நாளில் நான் கண்டதிலேயே மிகவும் வியக்கத்தக்க காடுகள் இவைதான் என அந்தமான் நிக்கோபர் தீவில் இருந்து காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் தெரவித்து உள்ளார்.

அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு சென்ற காங்கிரஸ் எம்.பியும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான Rahul Gandhi, அங்கு காணப்பட்ட காடுகள் குறித்து வியப்பும், கவலையும் கலந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார். தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவில், இந்த தீவுகளில் உள்ள இயற்கை வளங்கள் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி Andaman and Nicobar Islands சென்ற ராகுல், பழங்குடியின தலைவர்களையும், உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். குறிப்பாக கேம்ப்வெல் பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுடன் நேரடியாக சந்தித்து அவர்களின் வாழ்வாதார சிக்கல்கள் குறித்து கேட்டறிந்தார். அதன் பின்னர் வெளியிட்ட வீடியோவில், “என் வாழ்நாளில் நான் கண்டதிலேயே மிகவும் வியக்கத்தக்க காடுகள் இவைதான்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த காடுகள் தலைமுறைகள் கடந்து வளர்ந்த பழமையான மரங்களை கொண்டவை என்றும், இயற்கையின் அரிய சொத்தாக இருப்பதாகவும் அவர் விளக்கினார். ஆனால், தற்போது இந்த காடுகள் அழிவை நோக்கி தள்ளப்படுகின்றன என்ற கவலையையும் வெளிப்படுத்தினார். சுமார் 160 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மழைக்காடுகள் வெட்டப்பட உள்ளதாகவும், கோடிக்கணக்கான மரங்கள் அழிவின் விளிம்பில் உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இதையும் படிங்க: பார்ட் டைம் அரசியல்வாதி ராகுல்காந்தி!! அவரால் ஒரு பயனும் இல்லை - பாஜக!

 

I travelled through Great Nicobar today.

These are the most extraordinary forests I have ever seen in my life. Trees older than memory. Forests that took generations to grow.

The people on this island are equally beautiful - both the adivasi communities and the settlers - but… pic.twitter.com/vYdBWdYfIJ

— Rahul Gandhi (@RahulGandhi) April 29, 2026

மேலும், தீவில் வாழும் ஆதிவாசி சமூகங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன என்றும், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றது என்றும் ராகுல் கூறினார். வளர்ச்சி என்ற பெயரில் நடைபெறும் இந்த செயல்பாடுகள் உண்மையில் ஒரு “பேரழிவு” என அவர் விமர்சித்தார். இந்த நிலை தொடர்ந்தால், நாட்டின் இயற்கை வளங்களுக்கும், பழங்குடியின பாரம்பரியத்திற்கும் பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்த பிரச்சினையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், இந்திய மக்கள் இதை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே மாற்றம் ஏற்படும் என்றும் ராகுல் வலியுறுத்தினார். அவரது இந்த கருத்துகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்த புதிய விவாதத்தை கிளப்பியுள்ளன.

இதையும் படிங்க: வருமான வரி சோதனை நடந்ததா? இல்லையா? இன்று ஆதாரங்களை வெளியிடுகிறார் செல்வப்பெருந்தகை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share