×
 

டெல்லியில் வைகோ நூல் வெளியீட்டு விழா! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார்!

டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் நடைபெற்ற விழாவில் நாடாளுமன்றத்தில் வைகோ புத்தகத்தை ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் யாதவ் பெற்றுக்கொண்டார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவின் 30 ஆண்டுகால நாடாளுமன்ற உரைகளின் தொகுப்பான நாடாளுமன்றத்தில் வைகோ என்ற ஆங்கில நூல் வெளியீட்டு விழா, டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.

டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப் அரங்கில் நடைபெற்ற இந்கிகழ்வில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி நான்கு தொகுப்புகள் கொண்ட இந்த நூலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். சமாஜ்வாதி கட்சித் தலைவரும் முன்னாள் உத்தரப் பிரதேச முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.  

முன்னதாக, இவ்விழாவில் பங்கேற்கத் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், முதலமைச்சரின் பிரதிநிதியாக அமைச்சர் ராஜ்மோகன் நேரில் கலந்து கொண்டார். இப்போற்றத்தக்க நூல் வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப. சிதம்பரம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டப் பல்வேறு தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் எம்பிக்களும், முக்கியத் தலைவர்களும் திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

இதையும் படிங்க: ஆகஸ்ட் 4-இல் வைகோவின் புத்தக வெளியீடு! ராகுல் காந்தி வெளியிட அகிலேஷ் பெற்றுக்கொள்கிறார்!

நாடாளுமன்றத்தில் வைகோ ஆற்றிய உரைகள் மற்றும் அவரது வரலாற்றுச் சிறப்புமிக்கப் பணிகளை நினைவுகூரும் வகையில் இப்புத்தகம் அமைக்கப்பட்டுள்ளதாக விழா மேடையில் தலைவர்கள் புகழாரம் சூட்டினர்.  

இதையும் படிங்க: நீட் எதிர்ப்பு போராட்டம் புரட்சியாக மாறும்: சென்னை உயர்நீதிமன்ற வாசலில் வைகோ அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share