×
 

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரட்டும்.. தேர்தல் ஆணையத்துக்கு அப்ப இருக்கு கச்சேரி! ராகுல் காந்தி திட்டவட்டம்..!

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் வாக்கு திரட்டு விவகாரத்தில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

வாக்குத் திருட்டு விவகாரம் வீரியம் எடுத்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்டார் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாக்குத்திருட்டு விவகாரம் தொடர்பாக ஆதாரங்களை வெளியிட்டார். இதற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வாக்குகள் திருடப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி கூறுவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. தேர்தல் ஆணையத்திடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு அரசியலமைப்பிற்கு அவமானம் ஏற்படுத்தும் செயல் என்றும் குற்றம் சாட்டியது.

இந்த நிலையில் பீகாரில் நடந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, வாக்குத்திருட்டு விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிடிபட்ட பிறகும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு தன்னிடம் கேட்பதாகவும் வாக்குத்திருட்டு என்பது பாரத மாதாவின் ஆன்மா மீதான தாக்குதல் என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: இப்படியா அவமதிப்பீங்க? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.. தேர்தல் ஆணையம் கறார்..!

முழு நாடும் உங்களிடம் ஒரு பிரமாண பத்திரம் கேட்கும் என்று தேர்தல் ஆணையத்திற்கு தான் கூறுவதாகவும், ஒவ்வொரு சட்டமன்ற மற்றும் மக்களவைத் தொகுதிகளிலும் உங்கள் வாக்குத்திருட்டை கண்டுபிடித்து மக்கள் முன் வைப்போம் எனவும் சூளுரைத்தார்.

தேர்தல் ஆணையர்கள் மூன்று பேருக்கும் ஒன்றை சொல்ல விரும்புகிறேன் என்று கூறிய ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது வாக்குத்திருட்டியில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தேர்தல் ஆணையர்கள் மூவருக்கும் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது வாக்குத் திருட்டில் ஈடுபட்ட உங்கள் மீது நிச்சயம் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்று தெரிவித்தார்

இதையும் படிங்க: வீரியமெடுக்கும் "வாக்குத் திருட்டு"... ராகுல்காந்தியின் பேரணி இன்று முதல் தொடக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share