தேவையில்லாம பேசாதீங்க… RSS- ஐ பூந்து விளாசிய ராகுல் காந்தி… கொந்தளித்த பாஜக..!
எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக உரையாற்றிய போது ஆர்.எஸ்.எஸ்- ஐ ராகுல் காந்தி விமர்சித்தார்.
எஸ் ஐ ஆர் விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, இந்தியாவின் அனைத்து அமைப்புகளையும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றி வருகிறது என்று குற்றம் சாட்டினார். ராகுல் காந்தி பேசிக் கொண்டிருந்தபோது குறிப்பிட்ட மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தேவையில்லாமல் ராகுல் காந்தி பேசி வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவினர் முழக்கமிட்டனர். ஒவ்வொரு நிறுவனமாக ஆர்எஸ்எஸ் கைப்பற்றி வருவது உண்மை என்றும் அதை தான் கூறினால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் ராகுல் காந்தி அப்போது பேசினார். நாட்டில் அனைத்து உயர் பதவிகளிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பினரே உள்ளனர் என்றும் கல்வி நிலையங்கள் ஆர் எஸ் எஸ் மயமாகிவிட்டது என்றும் தெரிவித்தார். ராகுல் காந்தி கருத்துக்கு நாடாளுமன்ற விபகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கண்டனம் தெரிவித்தார்.
ஆர் எஸ் எஸ் க்கு எதிராக உள்ளவர்களை ஐடி, இடி, சிபிஐ மூலம் பாஜக தாக்குகிறது என்று குற்றம் சாட்டினார். தனது பேச்சு பாஜகவினருக்கு அசகொரியத்தை ஏற்படுத்தலாம் ஆனால் பேசி தான் ஆக வேண்டும் என்று தெரிவித்தார். இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் அமலாக்க துறையை மத்திய அரசு தனது கைகளில் வைத்துக்கொண்டு நினைத்ததை செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்தார். சிபிஐ தலைவரை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏன் பரிந்துரைக்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். இந்திய தேர்தல் ஆணையத்தை கைப்பற்றி மத்திய பாஜக அரசு ஜனநாயகத்தை சிதைத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்களில் உள்ள பதிவுகள் அழிக்கப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: S.I R. சட்டவிரோதம்... மக்களவையில் ராகுல் காந்தி ஃபயர் ஸ்பீச்...!
தலைமை தேர்தல் ஆணையரை பிரதமர் மோடியும் அமித் ஷாவும் தேர்வு செய்வது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். என்னுடைய கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் இன்னும் பதில் தரவில்லை என்றும் கூறினார். தலைமை தேர்தல் ஆணையரின் நியமிப்பதில் தீவிரம் காட்டும் பிரதமர் மோடி பிற விவகாரங்களில் ஏன் தீவிரம் காட்டவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். போலி வாக்காளர்கள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் உரிய விளக்கம் இல்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். பிரதமரின் நேரத்தை பொறுத்து தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிடுகிறது என்றும் குற்றம் சாட்டினார். ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் ஒரு பெண் பெயரில் 22 இடங்களில் வாக்குப்பதிவு நடந்தது எப்படி என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: RSS சித்தாந்தத்தில் ஒன்றுபட்ட விஜய்... சும்மா கண்துடைப்பு... சபாநாயகர் அப்பாவு விமர்சனம்...!