×
 
☰

"ஒரே குத்து தான்..! பேரணியில் நெருக்கிய நபர்.. கும்மாங்குத்து வைத்த ராகுல் காந்தி... வைரலாகும் வீடியோ..!!

பேரணியின் போது ராகுல் காந்தி தன்னை நெருக்கியவரை கும்மாங் குத்து குத்திய வீடியோ வைரல் ஆகி வருகிறது.

அக்டோபர் 12 அன்று புதுடெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் உச்சநீதிமன்றத்தை நோக்கி ஒரு முக்கியமான பேரணியை நடத்தினர். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியலில் நடைபெறும் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், வாக்குத் திருட்டு என்று அவர்கள் குற்றம்சாட்டும் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.

 மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரியங்கா காந்தி வத்ரா, மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, பிகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல கூட்டணித் தலைவர்களும் எம்பிக்களும் கலந்துகொண்டனர். 

இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் சமூக அமைப்பினரும் பெரும் எண்ணிக்கையில் இணைந்தனர்.பேரணி கான்ஸ்டிடியூஷன் கிளப் மற்றும் கன்னாட் பிளேஸ்-பாரகம்பா சாலை சந்திப்பில் தொடங்கியது. தலைவர்கள் பேருந்துகளில் வந்து பின்னர் நடைபயணமாக உச்சநீதிமன்றம் நோக்கி முன்னேறினர். ராகுல் காந்தி இதற்கு முன் பொதுமக்களை அழைத்து, கட்சி, சாதி, பாலினம், மாநிலம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து இந்தியர்களாக ஒன்றிணைந்து வரவேண்டும் என்றும், ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க இந்தப் போராட்டம் அவசியம் என்றும் வலியுறுத்தியிருந்தார். தலைமை நீதிபதி சூர்யா காந்தைச் சந்தித்து மனு அளிக்க அவர்கள் கோரியிருந்தனர்.

இதையும் படிங்க: இன்று உச்ச நிதிமன்றமே அதிரப்போகுது... உச்சக்கட்ட பாதுகாப்பில் டெல்லி... ராகுல் காந்தி விடுத்த எச்சரிக்கை...!

ஆனால் தலைமை நீதிபதி அந்தச் சந்திப்புக் கோரிக்கையை நிராகரித்து, சட்டப்பூர்வமாக மனு தாக்கல் செய்து நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியிருந்தார். அதனால் கூட்டணித் தலைவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் நோக்கத்துடன் பேரணியைத் தொடர்ந்தனர். இந்தப் பேரணையின் போது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ஒருவர் பின்னிருந்து நெருங்கி உள்ளார். அப்போது அந்த நபரை தனது வலது கையால் ராகுல் காந்தி முன்னிருந்து பின்னாக கும்மாங்குத்து குத்தி உள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: பிறர் சொல்வதை அப்படியே ஏற்காமல், சுயமாக சிந்திக்க வேண்டும்!! மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share