×
 
☰

ஒருபக்கம் SIR போராட்டம்.. மறுபக்கம் வியட்நாமில் ராகுலா? கிண்டலடிக்கும் பாஜக.. காங்கிரஸ் பதிலடி!!

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறும் நேரத்தில் மேற்கொள்ளப்பட்டதாக பாஜக தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தேர்தல் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர மறுசீரமைப்பு (எஸ்ஐஆர்) தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்வைத்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி தீவிர போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் வியட்நாம் பயணம் குறித்து பாஜக கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில், ராகுல் காந்தி விமானத்தின் பிசினஸ் கிளாஸ் பகுதியில் நீல நிற டி-ஷர்ட் அணிந்து ஏர்பாட்ஸ் உடன் அமர்ந்திருக்கும் காணொளியை பகிர்ந்துள்ளது. அந்தப் பதிவில், “பொய்களைப் பரப்புவதில் சோர்வடைந்துவிட்டேன்… சில நாட்கள் வியட்நாமில் சுற்றி வருகிறேன். இதை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள்!” என்று கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளது. இந்தப் பயணம், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறும் நேரத்தில் மேற்கொள்ளப்பட்டதாக பாஜக தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிப்படி, ராகுல் காந்தி தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணத்திற்காக சில நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு நான்கு நாட்கள் வியட்நாமில் தங்கியுள்ளார். இதற்கு முன், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள கோவாவில் காங்கிரஸின் ‘கோய் ரக்கோன் யாத்திரை’ நிறைவு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று, கட்சித் தலைவர்களுடன் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்தார். அதற்குப் பிறகே இந்தப் பயணம் தொடங்கியதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: நம்ம நாட்டாமைக்கு அடிச்சுது ஜாக்பாட்..!! இவ்ளோ பெரிய பதவியா..?? தொக்காய் தூக்கி கொடுக்கும் மோடி..!!

அக்டோபர் 12 அன்று காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணித் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி நடத்தி, எஸ்ஐஆர் தொடர்பான மனுவை தாக்கல் செய்தனர். இந்தப் பின்னணியில் பாஜகவின் விமர்சனத்துக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் கூறுகையில், “ராகுல் காந்திக்கு தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவருக்கு பொறுப்புகளும் உள்ளன. அவர் எங்கு சென்றாலும் பயனுள்ள செயல்களையே செய்கிறார். சில சமயம் பல்கலைக்கழக மாணவர்களைச் சந்திக்கிறார்; சில சமயம் அறிஞர்களைச் சந்திக்கிறார். 

https://x.com/BJP4India/status/2112235641690091585?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2112235641690091585%7Ctwgr%5E78ff56862c9d9bd8d63c0b8be7daa706d5a25290%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.maalaimalar.com%2Fnews%2Fnational%2Frahul-travels-to-vietnam-amidst-protests-bjp-mocks-by-sharing-a-video-congress-responds

நாட்டுக்கு நன்மை தரும் பணிகளையே அவர் மேற்கொள்கிறார். அவர் பத்திரிகையாளர்களிடம் பேசுகிறார். நமது பிரதமர் அவ்வாறு செய்கிறாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஆண்டு மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சர்ச்சை, எதிர்க்கட்சித் தலைவரின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் அரசியல் பொறுப்புகள் குறித்த விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.
 

இதையும் படிங்க: Breaking: 'பாமக, பாஜக இருக்கும் இடத்தில் விசிக இருக்காது': தொல். திருமாவளவன் திட்டவட்ட அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share