×
 

கோவை, நீலகிரிக்கு அதீத கனமழை எச்சரிக்கை! அவசியமின்றி வெளியே போகாதீங்க மக்களே!

வரும் 31 ஆம் தேதி பருவமழை தீவிரமடைந்து கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழை முதல் அதீத கன மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நீடித்த காற்றழுத்த தாழ்வு மண்ட லம் ரத்னகிரி அருகே நேற்று கரையை கடந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் மையம் கொண்டுள்ளதாகவும், இதன் காரணமாக தமிழகத்தின் எஞ்சிய பகுதிகளிலும், கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளிலும் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு வங்ககடலில் மற்றுமொரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 27-ந் தேதி உருவாகக்கூடும் என கூறியுள்ள வானிலை மையம், 31-ந்தேதி வரை மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழையின் முதல் சுற்று தீவிரமடைந்து மிக கனமழை முதல் அதீத கனமழையை கொடுக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக மும்பை முதல் ரத்னகிரி வரையிலான கொங்கன் கடற்கரை பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு தீவிர மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், காவிரி நீர்பிடிப்பு பகுதியான முல்லை பெரியார், சிறுவாணி, பரம்பிக்குளம் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பதிவாகும் என்றும் மேட்டூர் அணை இம்மாத இறுதியில் நிரம்பி ஜூன் முதல் வாரத்தில் உபரி நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஜில் அப்டேட்! அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்கும் மழை... எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?

தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட குறைந்து காணப்படும், மாலை, இரவு நேரங்களில் கடலோர பகுதி களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யலாம் எனவும் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், தேவாலா, அவலாஞ்சி, கேட்டி, கோவை மாவட்டம வால் பாறை, கேரளா மாநிலம் இடுக்கி, வயநாடு, மூனாறு, கர்நாடகாவின் குடகு, சிக்மங்களூர், ஹசன் போன்ற மேற்கு நீர் வீழ்ச்சிகளுக்கு 31- ஆம்தேதி வரை பொதுமக்கள் சுற்றுலா செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஆட்டம் ஆரம்பம்.. அடிச்சு தூக்க போகுது மழை..! கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share