#வானிலை நிலவரம்: லிஸ்டில் உங்க மாவட்டம் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...
தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் வடகிழக்கு பருவமடை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கேரள மற்றும் கர்நாடகாவில் தென்மேற்கு பருவ மழை கடந்த மே மாதம் தொடங்கியது. கடந்த இரண்டு மாதங்களாக அந்த மாநிலங்களில் கன மழை கொட்டி தீர்த்து வரும் நிலையில், அதன் தாக்கமானது தமிழகத்தில் எல்லையோர மாவட்டங்களிலும் பிரதிபலிக்கிறது.
குறிப்பாக கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்த வண்ணம் உள்ளது. வழக்கமாக தமிழகத்திலும் ஆகஸ்ட் மாதம் எப்போதாவது தான் மழை பெய்யும். ஆனால், இந்த ஆண்டு கடந்த சில நாட்களில் பல இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது.
தெற்கு கடலோர ஆந்திரப் பிரதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: புழல் சிறையில் வெளிநாட்டு பெண் கைதி அட்ராசிட்டி.. தாக்குதலுக்கு உள்ளான காவலர் கதறல்..!
மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 - 55 கி.மீ வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு கேரளா கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு – மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதனிடையே, தமிழகத்தில் இன்று ஏழு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், அரியலூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை தமிழக மற்றும் புதுவை காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இதோ வந்துட்டான்ல…”ரெட் அலர்ட்”... எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?