×
 

அலற விடும் ஆரஞ்சு அலர்ட்… லிஸ்ட்- ல சென்னையும் இருக்காம்..! வெளுக்க போகுது மழை…!

தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கை தொடர்பான விவரத்தை பார்க்கலாம்.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மட்டுமே அதிக காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் புயல் சின்னங்கள் உருவாகி இருக்கும் சூழலில், அதேபோல் இந்த ஆண்டு நிறைய புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நேரத்தில் சற்று மழை பொழிவு அதிகமாக இருந்தாலும் இடையில் மழைப்பொழிவு இல்லாமல் இருந்தது. மோன்தா புயல் உருவாக்கிய போது பெய்த மழை படிப்படியாக குறைந்தது. தற்போது மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது.

மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் , நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 26, 27 ஆம் தேதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் 28ஆம் தேதி மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 29ஆம் தேதி சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மக்களே உஷார்... வங்கக்கடலில் அதிரடி மாற்றம்...அடுத்த 24 மணி நேரத்தில் வருகிறது அடுத்த ஆபத்து...!

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மாவட்டங்களுக்கும் 21-ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், புதுச்சேரி, மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டத்திற்கும் 21-ஆம் தேதி ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. 30-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது. 

இதையும் படிங்க: கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறையா? - சேலம் , கடலூர் குறித்து வெளியானது முக்கிய அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share