×
 

குடை எடுத்தாச்சு... 11 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் கனமழை...!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது. அதன் காரணமாக ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது. சமீப நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையிலும் கன மழை பெய்து வருகிறது. இடி மின்னலுடன் கூடிய கனமழை காரணமாக ஆங்காங்கே மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டது.

மேலும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இரவு நேரங்களில் கனமழை கொட்டி தீர்க்கிறது. மேலும், வங்கக்கடலில் அடுத்தடுத்து இரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கடலூர், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், நீலகிரி, கோவை மாவட்ங்களில் 27, 28ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.புதுச்சேரி மாநிலத்தின் சில பகுதிகளிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. 

இதையும் படிங்க: 5 நாட்களுக்கு வெளுக்க போகுது மழை... லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கா தெரிஞ்சுக்கோங்க!

மேலும், தென் தமிழக கடலோரப் பகுதிகள், வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் 24, 25ம் தேதிகளில் மணிக்கு 60 கிமீ வேக்திலும் சூறாவளிக்காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மக்களே குடை கொண்டு போங்க! 11 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share