#BREAKING காலையிலேயே துப்பாக்கிச்சூடு... கோயிலுக்குள் இரட்டை கொலை... குற்றவாளி சுட்டுப்பிடிப்பு...!
இரவு நேர காவலாளிகள் இருவர் கோயிலுக்குள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி சுட்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
இராஜபாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலின் இரவு நேர காவலாளிகள் இருவர் கோயிலுக்குள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி சுட்டு பிடிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தேவதானத்தை சேர்ந்த பேச்சிமுத்து (60), சங்கர பாண்டியன் (50) மற்றும் மாடசாமி ஆகிய மூவர் இந்து சமய அறநிலையத்த துறைக்கு சொந்தமான நச்சாடை தவிர்த்து அருளிய சாமி கோயிலில் காவலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.
இதில் மாடசாமி நேற்று முன்தினம் பகலில் வேலை பார்த்ததால் மற்ற இருவரும் இரவு நேரத்தில் காவல் காத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை மாடசாமி கோவிலுக்கு வந்த போது பிரதான கதவின் சிறிய கதவு திறந்திருந்தது.
இதையும் படிங்க: #BREAKING அதிகாலையிலேயே அதிர்ந்த டெல்லி... போலீஸ் நடத்திய என்கவுன்ட்டரில் 4 முக்கிய குற்றவாளிகள் சுட்டுக்கொலை...!
உள்ளே சென்று பார்த்தபோது இரவு நேர காவலாளிகள் பேச்சி முத்து மற்றும் சங்கர பாண்டியன் ஆகிய இருவரும் வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தனர்.
அருகே இருந்த உண்டியல் சேதமாகி இருந்தது. இதுகுறித்து கோவில் அதிகாரிகளிடம் மாடசாமி தகவல் கூறியுள்ளார். அவரது தகவலின் பேரில் விரைந்து வந்த காவல் துறையினர் உள்ளே சென்று ஆய்வு செய்தனர்.
உண்டியல் உடைக்க முயற்சி செய்யப்பட்டிருப்பது உறுதி ஆனது. இதனையடுத்து இருவரது உடலையும் கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
கோவிலில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு டிஎஸ்பி பஸினா பீவி தலைமையிலான காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் காவலாளிகளைக் கொன்றுவிட்டு, கோயில் இருந்த நகை, பணம் திருடப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து 6 தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் தேடப்பட்டு வந்தவர்களில் நாகராஜன் என்பவரை போலீசார் சுட்டு பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குற்றவாளியை சுற்றிவைத்து கைது செய்ய முயன்ற போது, நாகராஜ் தாக்கியதில் சப் இன்ஸ்பெக்டர் கோட்டியப்பசாமி என்பவர் காயமடைந்தார். அப்போது தப்ப முயன்ற நாகராஜை இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் காலில் சுட்டு பிடித்ததாக கூறப்படுகிறது.
தற்போது காயமடைந்த சப் இன்ஸ்பெக்டர் கோட்டியப்பசாமி, குற்றவாளி நாகராஜ் இருவரும் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மூன்றாம் உலகப்போர், வெள்ளம், பூகம்பங்கள் ... 2026 மனித இனத்தின் பேரழிவா? - பாபா வாங்கா பகீர் கணிப்புகள்...!