×
 

#BREAKING: ராஜஸ்தானில் பயங்கரம்... போர் விமானம் நொறுங்கி விபத்து! மீட்பு பணிகள் தீவிரம்

ராஜஸ்தானின் சுரு மாவட்டம் அருகே இந்திய போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் ரத்தன்கர் பகுதியில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விபத்து குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இதனிடையே, 2023 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் மிக்-21 போர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர். ஆனால் விமானி சிறு காயங்களுடன் தப்பினார்.

இதையும் படிங்க: பைக் மீது லோடு வேன் மோதிய கோர விபத்தில் பெண் பலி... பதைப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள்.

இதேபோல், 2024 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் ஜெய்சல்மர் பகுதியில் மற்றொரு போர் விமான விபத்து நிகழ்ந்தது, இது பாரத் சக்தி முப்படைகள் பயிற்சியின் போது நடந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது விமான விபத்து நடந்துள்ள இடத்தில் மீட்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: UK-வில் 33% பிறப்பு குறைபாடுகளுக்கு பாகிஸ்தானியர்களே காரணம்..! பகீர் கிளப்பிய பதிவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share