×
 

SIR பணிச்சுமையால் விரக்தி... கேரளாவை அடுத்து ராஜஸ்தான் பள்ளி ஆசிரியர் விபரீத முடிவு...!

கேரளாவை தொடர்ந்து ராஜஸ்தானிலும் SIR பணிக்குச் சென்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்ப Nடுத்தியுள்ளது தியுள்ளது.

ராஜஸ்தானிலும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு (SIR), பூத் நிலை அதிகாரியாக சென்ற (BLO) தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கல்வாட்டில் உள்ள தர்மபுராவைச் சேர்ந்தவர் முகேஷ் ஜாங்கிட். 45 வயதான இவர் ஜெய்ப்பூரில் உள்ள நரி கா பாஸில் உள்ள தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவரை ராஜஸ்தானில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்த பணிக்கு பூத் நிலை அதிகாரியாக பணியமர்த்தியுள்ளனர். நேற்று காலை வழக்கம் போல் SIR பணிக்கு சென்ற முகேஷ் ட்ரையல் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

முகேஷின் இரு சக்கர வாகனம் பிந்தயகா ரயில்வே கிராசிங் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. அவரது ஆடையில் தற்கொலை கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் SIR பணியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: போராட்ட களத்தில் நாம் தமிழர் கட்சி... SIR- க்கு வலுக்கும் எதிர்ப்பு...! சீமான் அறிவிப்பு...!

SIR பணி காரணமாக அவர் அழுத்தத்தில் இருந்ததாகவும், அவரது மேற்பார்வையாளர் அவருக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், அவர் இடைநீக்கம் செய்யப்படுவார் என அச்சுறுத்தப்பட்டதாகவும் முகேஷ் குடும்பத்தினர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.

இதற்கு முன்னதாக, கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பையனூர் ராமந்தளி குன்னாரு AUP பள்ளியின் ஊழியரான அனீஷ் ஜார்ஜ் என்பவர் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 15 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வந்த அனீஸ், சமீப காலமாக வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்த பணியில் பூத் நிலை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த பணியால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த அனீஸ் நேற்று காலை அவரது குடும்பத்தினர் தேவாலயத்திற்கு சென்ற நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

SIR பணியால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக ஒரே நாளில் இரண்டு அரசு ஊழியர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது.

இதையும் படிங்க: SIR பணிகளுக்கு எதிர்ப்பு... உள்ளாட்சி தேர்தலை சுட்டிக்காட்டி சுப்ரீம் கோர்ட்டில் மனு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share