எங்க பொறுமையை சோதிக்காதீங்க..! அடங்க மறுக்கும் பாகிஸ்தான்.. மிரளவிடும் இந்தியா..!
எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம் என பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிவரும் நிலையில் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பழி தீர்க்கும் விதமாக பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளை இந்திய ராணுவம் கொன்று வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடரும் என திட்டவட்டமாக மத்திய அமைச்சர்கள் கூறியிருந்த நிலையில், பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய தாக்குதல் குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், பாகிஸ்தானில் அப்பாவி மக்கள் யாரையும் குறி வைத்து தாக்கவில்லை என திட்டவட்டமாக கூறினார். இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 100ககும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறிய அவர், பாகிஸ்தானில் இருந்த பயங்கரமான முகாம்கள் அழிக்கப்பட்டன என்றும் பாகிஸ்தானின் சொந்த மண்ணுக்குள் சென்று தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார். எங்களுடைய பொறுமையை சோதிக்க வேண்டாம் என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த ராஜ்நாத் சிங், ஆப்ரேஷன் சிந்தூரில் அதிநவீன போர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆயுதங்களை பயன்படுத்தி உள்ளோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானை கதறவிட்ட ஆபரேசன் சிந்தூர்.. இன்று டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்.. மத்திய அரசு அதிரடி!
பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் துல்லியமாக தீவிரவாதிகள் அழிக்கப்பட்டதாகவும், கற்பனையிலும் நினைத்து கூட பார்க்க முடியாது தாக்குதல் ஆப்ரேஷன் சிந்தூர் எனவும் பெருமிதம் தெரிவித்தார். ஆனால், இந்திய ராணுவத்திற்கு இந்த தாக்குதலில் பெரிய பாதிப்பு இல்லை என்றும் பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தீவிரவாதிகளின் ஒன்பது நிலைகள் தாக்கப்பட்டதாக கூறினார்.
இதையும் படிங்க: ராணுவ வீரர்களுக்கு சல்யூட்! ஆபரேஷன் சிந்தூர் முழு வெற்றி.. ராஜ்நாத் சிங் பெருமிதம்..!