×
 

விறுவிறு தேர்தல்..! தபால் வாக்கு செலுத்திய பாமக நிறுவனர் ராமதாஸ்..!!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தபால் வாக்கு செலுத்தினார்.

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நிலையில், தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் சில முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15 அன்று தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்கள் மற்றும் புதுச்சேரிக்கான சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 23, 2026 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது, மேலும் வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடக்கும். இந்தத் தேர்தல் சூழலில், தபால் வாக்கு செலுத்தும் தேதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல் துறையினர், முப்படை வீரர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோருக்கு மட்டுமே தபால் வாக்கு வசதி இருந்த நிலையில், இப்போது அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஐந்து புதிய துறைகளைச் சேர்த்து தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசியத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தலாம்.

இந்த மாற்றம், தேர்தல் பணியில் ஈடுபடும் அல்லது அத்தியாவசிய சேவைகளால் தேர்தல் நாளில் வாக்குச் செலுத்த முடியாதவர்களுக்கு உதவும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏறக்குறைய எட்டு லட்சம் பேரின் வாக்குகள் பாதிக்கப்படாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் 40 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் (PwD) வீட்டிலிருந்தபடியே தபால் வாக்கு செலுத்தும் வசதியை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: என்னம்மா கண்ணு செளக்கியமா?... மல்லு கட்டும் அப்பா, மகன்... மாம்பழம் Vs சிலிண்டர் லாபம் யாருக்கு?

இவர்களுக்கு படிவம் 12D மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாமக நிறுவனரான ராமதாஸ் தற்போது மிகவும் வயதானவராக இருப்பதால், அவர் இந்த சிறப்பு வசதியைப் பயன்படுத்தி தனது ஜனநாயகக் கடமையை ஆற்றி உள்ளார். தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் கையொப்பமிட்டு தனது வாக்கினை செலுத்தினார். 

இதையும் படிங்க: உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்த ராமதாஸ்..! ஓடோடி சென்று நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share