×
 

ராமேஸ்வரத்தில் திடீர் மாற்றம்... 300 மீட்டருக்கு உள்வாங்கிய கடல்... தரை தட்டி நிற்கும் படகுகள்...!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் 300 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல் நீர்; அச்சத்தில் மீனவர்கள்; தரை தட்டி நிற்கும் படகுகள். 

ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் மாதந்தோறும் வருகின்ற அமாவாசை நாள்களில் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்தால் மோட்சம் கிட்டும் என்ற ஐதீகம் உள்ளது

இந்த நிலையில் இன்று ஆனி மாத அமாவாசை தினத்தை ஒட்டி பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அக்னி தீர்த்த கடற்கரையில் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி கொடுத்து வருகின்றனர். இதனிடையே ராமேஸ்வரத்தில் கடல் 300 மீட்டருக்கு உள் வாங்கி இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள்,  ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுபடகுகளில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர் இந்த நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் சுமார் 300 மீட்டர் தொலைவிற்கு கடல் நீரானது உள்வாங்கி உள்ளதால் மீனவர்கள் அச்சம் அடைந்து வருவது மட்டுமல்லாது கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் தரை தட்டி நிற்கின்றது

இதையும் படிங்க: நாட்டுக்கே CM-னாலும் மனசளவுல குழந்தை சார்..!! மினியேச்சர் காருடன் விளையாடிய முதல்வர் விஜய்..!!

மேலும் கடலுக்கு உள்ளே உள்ள நத்தை அரிய வகை சிறிய சங்குகள் உள்ளிட்டவை வெளியே தெரிகின்றது. மேலும் இதுகுறித்து கடல் சார் அதிகாரிகளிடம் கேட்டபோது காலநிலை மாற்றம் காரணமாக கடல் நீர் உள்வாங்குவதும் சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமான ஒன்றுதான் என்றும் இதன் மூலம் மீனவர்கள் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளனர்

இதையும் படிங்க: ஆட்சிக் கவிழ்ப்பு சதி... மேலும் 3 பேர் Arrest... துருவி துருவி விசாரிக்கும் போலீஸ்... பரபரப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share