ராபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம்!! நுகர்வோர் கோர்ட் தரமான சம்பவம்!! இனி ஏமாத்துவீங்களா?
வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வகையில் தவறான விளம்பரம் வெளியிட்ட, 'ராபிடோ' நிறுவனத்துக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம், 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ராபிடோன்னா இந்தியாவுல பைக் டாக்ஸி, ஆட்டோ, கார் சவாரி சேவை கொடுக்குற பெரிய நிறுவனம். இவங்க செயலியை லட்சக்கணக்கானவங்க பயன்படுத்துறாங்க. இந்த நிறுவனம், “கியாரன்டி ஆட்டோ! 5 நிமிடத்துல ஆட்டோ வந்துடும், இல்லேன்னா ரூ.50 திருப்பி தருவோம்”னு ஒரு கவர்ச்சியான விளம்பரத்தை வெளியிட்டு, 120-க்கும் மேற்பட்ட நகரங்களில், ஒன்னரை வருஷத்துக்கு மேல விளம்பரம் செஞ்சாங்க. இந்த விளம்பரம் யூடியூப், ஃபேஸ்புக் மாதிரியான தளங்களில் பல மொழிகளில் பரவியது. ஆனா, இந்த “கியாரன்டி” வாக்குறுதி உண்மையிலேயே நிறைவேறலன்னு வாடிக்கையாளர்கள் புகார் கொடுத்தாங்க.
என்ன பிரச்சினைன்னு பார்த்தா, 5 நிமிடத்துல ஆட்டோ வரலைன்னு பணத்தை கேட்டவங்களுக்கு, ராபிடோ ரொக்கமா ரூ.50 தரல. அதுக்கு பதிலா, “ராபிடோ காயின்ஸ்”னு ஒரு 5 ரூபாய் மதிப்பு கொடுத்து, அதை அடுத்த பைக் சவாரிக்கு மட்டுமே யூஸ் பண்ண முடியும்னு சொல்லியிருக்காங்க. அதுவும், இந்த காயின்ஸ் ஒரு வாரத்துக்கு மட்டுமே செல்லுமாம்! இந்த விஷயத்தை விளம்பரத்துல தெளிவா சொல்லவே இல்லை. “T&C Apply”னு ஒரு சின்ன டிஸ்கி கூட பார்க்க முடியாத அளவுக்கு மறைச்சு வச்சிருந்தாங்க. இதனால, வாடிக்கையாளர்கள் ஏமாந்து போனாங்க.
இதைப் பத்தி கடந்த ஒரு வருஷத்துல 1,200-க்கும் மேற்பட்ட புகார்கள் நுகர்வோர் ஹெல்ப்லைனில் (NCH) வந்திருக்கு. இதுல 575 புகார்கள் ஏப்ரல் 2023 முதல் மே 2024 வரை வந்தது, பிறகு ஜூன் 2024 முதல் ஜூலை 2025 வரை இன்னும் 1,224 புகார்கள் வந்திருக்கு. இவை எல்லாம் பணம் திருப்பி தரல, அதிக கட்டணம் வசூலிச்சது, சேவை குறைபாடு, வாக்குறுதி அளிச்ச காசை தரலன்னு பல விஷயங்களை உள்ளடக்கியது. இதுல 5 புகார்கள் நேரடியா இந்த “கியாரன்டி ஆட்டோ” விளம்பரத்தை பத்தினவை. இதை CCPA சுயமா (suo motu) எடுத்து விசாரிச்சு, ராபிடோவோட விளம்பரம் “பொய்யானது, நுகர்வோரை ஏமாத்துறது”னு கண்டுபிடிச்சு.
இதையும் படிங்க: இபிஎஸ் வழக்கு... "NO RESTRICTION"! இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
CCPA-வோட 52 பக்க உத்தரவுல, ராபிடோவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிச்சு, இந்த தவறான விளம்பரங்களை உடனே நிறுத்த சொல்லியிருக்கு. அதோட, ரூ.50 வாக்குறுதி கொடுத்து ஏமாத்தப்பட்ட எல்லா வாடிக்கையாளர்களுக்கும் முழு பணத்தை திருப்பி கொடுக்கணும்னு உத்தரவு போட்டிருக்கு. இதோட, 15 நாளுக்குள்ள ஒரு கம்ப்ளையன்ஸ் ரிப்போர்ட்டை தாக்கல் செய்யவும் சொல்லியிருக்கு. இந்த விளம்பரங்கள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-னு பிரிவு 2(28) மற்றும் 2(47)-ல “மோசடி விளம்பரம், நியாயமற்ற வர்த்தக நடைமுறை”னு வகைப்படுத்தப்பட்டிருக்கு.
ராபிடோ தரப்புல, “எங்க விளம்பரத்துல எல்லாம் தெளிவா சொல்லியிருக்கோம், ரூ.50 வரை காயின்ஸ் தருவோம்னு குறிப்பிட்டிருக்கோம்”னு வாதாடினாங்க. ஆனா, CCPA இதை ஏத்துக்கல. “விளம்பரத்துல ‘வரை’னு வார்த்தையே இல்லை, T&C-யும் தெளிவா காட்டல”ன்னு குற்றம்சாட்டியிருக்கு. இந்த அபராதம் ராபிடோ மாதிரி பெரிய நிறுவனத்துக்கு பெரிய தொகையில்லேனாலும், இது மத்த ஸ்டார்ட்அப்களுக்கு ஒரு எச்சரிக்கையா இருக்கு. இனி விளம்பரத்துல உண்மையை மட்டும் சொல்லி, வாடிக்கையாளர்களை மதிக்கணும்னு இந்த உத்தரவு சொல்லுது. இல்லேன்னா, CCPA கண்ணை மூடிட்டு இருக்காது!!
இதையும் படிங்க: “யாரை பார்த்து அணில்-ன்னு சொன்ன” - மதுரை மாநாட்டில் சீமானை சிதறவிட்ட தவெக தொண்டர்கள்...!