மக்களே கவனிங்க... 55 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு... அதிகாரிகள் வெளியிட்ட முக்கிய தகவல்...!
புதிதாக 55 ஆயிரம் பேருக்கு ரேஷன் அட்டைகள் வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) என்பது அத்தியாவசிய உணவுப் பொருட்களை நியாய விலையில் பெறுவதற்கான முக்கிய ஆவணமாகும். இது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. மேலும் குடும்ப உறுப்பினர்களின் அடையாளமாகவும், அரசு நலத்திட்டங்களுக்கான சான்றாகவும் பயன்படுகிறது.
குறிப்பாக, ஸ்மார்ட் குடும்ப அட்டை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இந்த அட்டைகள் டிஜிட்டல் முறையில் இயங்கி, மின்னணு வடிவில் பதிவிறக்கம் செய்ய முடியும். ஆனால், அட்டை தொலைந்து போகும்போது, புதிய அட்டைக்கு விண்ணப்பிப்பது அவசியம். தமிழ்நாட்டில் இன்றும் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைக்குப் பிறகு மூன்றாவது மிக முக்கியமான அடையாள ஆவணமாக ரேஷன் கார்டு இருக்கிறது.
வங்கிக் கணக்கு தொடங்க, சிம் கார்டு வாங்க, எரிவாயு இணைப்பு மாற்ற, வீட்டுமனை பட்டா பெற, அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க – எல்லாவற்றுக்கும் ரேஷன் கார்டு நகல் கேட்கப்படுகிறது. குறிப்பாக திருமண உதவித் தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாண்டு மகளிர் உரிமைத்தொகை போன்ற திட்டங்களுக்கு ரேஷன் கார்டு இல்லாமல் விண்ணப்பமே ஏற்கப்படுவதில்லை.
இதையும் படிங்க: பக்தர்கள் கவனத்திற்கு... திருப்பதி ஏழுமலையான் கோவில் டிக்கெட் விநியோகம் எப்போது? முழு விவரம்...!
இதனிடையே, தமிழகத்தில் தகுதியான 55 ஆயிரம் பேருக்கு விரைவில் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என நுகர் பொருள் வாணிப கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு விரைவில் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய ரேஷன் அட்டை கோரிய 1.07 லட்சம் விண்ணப்பங்கள் அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரேஷன் கடைகளில் சானிட்டரி நாப்கின்ஸ்..! பதில் வரலைன்னா... துறை செயலாளர்களுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு...!