EXPIRED தலைவர்கள் ஒப்பாரி வெச்சாலும்... அச்சச்சோ என்ன பொசுக்குனு இப்படி பேசிட்டாரு உதயகுமார்!
காலாவதியான தலைவர்கள் ஒப்பாரி வைத்தாலும் இபிஎஸ் இன் வெற்றிப் பயணத்தை திசை திருப்ப முடியாது என ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.
கரூரில் நேற்று திமுகவின் முப்பெரும் விழா கோலகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், திமுக எப்போதும் நெருக்கடிகளுக்கு அஞ்சுகின்ற கட்சி கிடையாது என்று தெரிவித்தார். அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியதே பாஜக தான் என எடப்பாடி பழனிச்சாமி உண்மையை பேசியிருப்பதாக விமர்சித்தார். தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு குரல் கொடுக்க தெம்பு, திராணி இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் குற்றம்சாட்டினார்.
தான் ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்ற மாண்பின்றி தன்னை ஒருமையில் விமர்சிப்பதாக ஆதங்கத்தை வெளிப்படுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், திராவிட கொள்கை என்றால் என்னவென்றே தெரியாமல் அதிமுகவின் தலைவராக இபிஎஸ் இருப்பதாக விமர்சித்துள்ளார்.
அண்ணாயிசம் பேசிய அதிமுகவினரை அடிமையிசம் பேச வைத்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் தெரிவித்தார். டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து விட்டு எடப்பாடி பழனிச்சாமி முகத்தை மூடி கொண்டதாக வெளியான சம்பவம் தொடர்பாக பேசிய முதலமைச்சர், காலில் விழுந்த பிறகு முகத்தை மூடி கர்ச்சீப் எதற்கு என் மக்கள் கேட்பதாக சுட்டிக்காட்டி இருந்தார். எடப்பாடி பழனிச்சாமி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சரமாரியாக பேசி இருந்தார்.
இதையும் படிங்க: மோசடி பண்ணிருக்காங்க... அன்புமணி பாமக தலைவர் கிடையாது! ஜி.கே மணி திட்டவட்டம்
இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசுகையில், தமிழகத்தில் காலாவதியான தலைவர்கள் ஒப்பாரி வைத்தாலும் எடப்பாடி பழனிச்சாமி இலட்சிய பயணத்தை ஒருபோதும் திசை திருப்ப முடியாது என தெரிவித்தார். அரசியல் காழ்ப்புணர்ச்சி இருந்தாலும் வன்மமாக எடப்பாடி பழனிச்சாமி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசலாமா என கேள்வி எழுப்பினார். தமிழகத்தின் முதுகெலும்பை உடைத்து விட்டு, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரைப்பதாக ஆர்.பி உதயகுமார் விமர்சித்தார்.
இதையும் படிங்க: 2026 தேர்தலே இலக்கு! அதிமுகவுடன் இணைந்து அனல் பிரச்சாரம்... அண்ணாமலை அறிவிப்பு