ரூ.800 கோடிப்பே... தவெகவை வளர்க்க கோடிகளை கொட்டிக்கொடுத்த சாராய ஆலை உரிமையாளர்கள்... ஆர்.பி.உதயகுமார் பகீர் குற்றச்சாட்டு...!
விஜய் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் கிடைக்குமா என மக்கள் இலவு காத்த கிளியாக கவலையுடன் உள்ளனர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
ஒவ்வொரு ஊரில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஊழலற்ற, தூய்மையான நிர்வாகத்தை தருவேன் என சினிமா வசீகர வசனம் பேசி தமிழ் நாட்டின் முதலமைச்சராக அரியணையில் அமர்ந்துள்ள விஜய், இன்றைக்கு எப்படிப்பட்ட துய நிர்வாகத்தை தந்து கொண்டிருக்கிறார் என்கிற ஆயிரம் ஆயிரம் கேள்விகள் எல்லோரிடமும் ஏற்பட்டிருக்கிறது
த.வெ.க ஆட்சி அமைந்தவுடன் 716 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு இட்டதோடு மதுபான விலையை உயர்த்த மதுபான உற்பத்தியாளர்கள் வைத்த கோரிக்கையும் சத்தம் இல்லாமல் த.வெ.க அரசு ஏற்றுக்கொண்டு ஒரு மதுபான தொழிற்சாலைக்கு இத்தனை கோடி என வகைப்படுத்தி லஞ்சம் கை மாறி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 20 மதுபான தொழிற்சாலைகள் உள்ளன அதில்
11 தொழிற்சாலைகள் ஐ எம் எஃப் எல் எனப்படும் வெளிநாட்டு மது வகைகள் என இந்தியாவில் தயாரிக்கும் 8 தொழிற்சாலைகள், பீர் வகையாக தயாரிப்பு, அதோடு ஒரு ஒயின் தயாரிப்பு தொழிற்சாலை என்று தமிழகத்தில் இருக்கிறது. ஒரு தொழிற்சாலைக்கு இவ்வளவு கோடி என நிர்ணயித்து சுமார் 800 கோடி ரூபாய் த.வெ.க கட்சியின் வளர்ச்சி நிதியாக வழங்கப்பட்டுள்ளதாக வெளிவருகின்ற செய்தி உண்மையான செய்தியா அல்லது இந்த செய்தியை எப்படி நாம் எடுத்துக் கொள்வது விஜய்யின் தூய்மையான நிர்வாகம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
இதையும் படிங்க: இன்று சி.எம்.விஜய் போடப்போகும் முக்கிய கையெழுத்து... மாறுமா 11 ஆயிரம் பேரின் தலையெழுத்து?
அதோடு த.வெ.க.அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு வழக்கறிஞர்களை நியமிக்க 5 லட்சத்திலிருந்து ரூபாய் 30 லட்சம் வரை பேரம் பேசப்பட்டு இதன் மூலம் 120 கோடி வசூல் வேட்டை நடந்துள்ளது இதை நாம் சொல்லவில்லை த.வெ.க கட்சியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞரே தனக்கு நீதி கேட்டு உயர் நீதிமன்றக்கு சென்றுள்ளார் என்கிற செய்தியையும் எப்படி நாம் எடுத்துச் சொல்வது விஜய்யின் தூய்மையான நிர்வாகம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
அதோடு மாநிலம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பஞ்சாயத்து அலுவலகங்களில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 57.98 லட்சம் ரூபாயை கைப்பற்றிய நிலையில், இந்த நிகழ்வு தொடர்பாக அரசு அதிகாரிகள், தனியார் என 64 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது இந்த லஞ்சப்பணம் த.வெ.கவின் எந்த பவர் சென்டருக்கு செல்கிறது செய்தியும் நாம் எப்படி எடுத்துக் கொள்வது? என்பதுதான் மக்களுக்கு விடை தெரியாத வினாவாக உள்ளது இதையும் விஜய்யின் தூய்மையான நிர்வாகம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
அதேபோல கல் குவாரிகளில் அதிரடி ஆய்வுகளில் மேற்கொண்டதாக செய்திகள் வெளிவந்தது கனிம வளம் கடத்தலுக்கு கமிஷன் வாங்கப்படுகிறதா அல்லது கனிம வளம் கொள்ளை போவதை தடுப்பதற்கு என்ன நடவடிக்கை த.வெக அரசு எடுத்து இருக்கிறது என்பது இன்னும் விடை தெரியாத வினாவாகத்தான் இருக்கிறது இந்த செய்தியையும் நாம் எப்படி எடுத்துக் கொள்வது விஜய்யின் தூய்மையான நிர்வாகம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
த.வெ.க அரசு பொறுபேற்ற நாளில் இருந்து தமிழ்நாட்டிலே மின்சாரத்தை காணோம் சட்ட ஒழுங்கை காணோம், கவேரியில் தண்ணீரை காணோம், பெண்கள் பாதுகாப்பை காணோம், இப்போது தேர்தலிலே கொடுத்த வாக்குறுதிகள் காணாமல் போய்விட்டது அதை காவல்துறையை வைத்து தேடிக் கொண்டிருக்கிறார்கள் இப்படி காணாமல் போன தமிழக உரிமைகளை தேடிக் கொண்டிருக்கிற செய்தியை எப்படி எடுத்துக் கொள்வது விஜய்யின் தூய்மையான நிர்வாகம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
மொத்தத்தில் விஜய்யின் 55 நாட்கள் த.வெ.க ஆட்சியில் காணாமல் போன மக்கள் உரிமைகளை கண்டுபிடிக்கவே நேரம் இல்லாத போது ஊழலற்ற, தூய்மையான நிர்வாகத்தை உறுதி செய்திட எங்கே முதல்வருக்கு நேரம் இருக்கப் போகிறது .
விஜய் என்ன நினைப்பார் சினிமா வசீகர வசனத்தை சும்மா சொல்லி போட்டால் கிடக்குது. ஆனால் மக்கள் என்ன கேட்கிறார்கள் சொன்னாரே,சொன்னாரே நமக்கு விஜய் இனிமேலாவது செய்வாரா செய்வாரா என்று கேட்கிறார்கள். மாற்றம் தந்த மக்கள் எப்போது மாற்றம் வரும் என இலவு காத்த கிளியாக தமிழ்நாட்டு மக்கள் கவலையோடு காத்திருக்கிறார்கள்
விஜய் நினைக்கலாம் ஆட்சி அமைத்து இரண்டு மாதங்களிலே என்ன செய்ய முடியும் என்று கட்சி ஆரம்பித்து இரண்டு வருடத்தில் மாயாஜாலத்தை காட்டி முதலமைச்சர் அரியணையை பிடிக்க தெரிந்தவிஜய்க்கு இதெல்லாம் சாதாரணம்.
சினிமா வசீகர வசனத்தால் விஜய் ஊதுகிற மகுடக்கு தமிழ்நாடு மக்கள் மயங்கி கிடக்கிறார்கள் நாம் என்ன செய்ய முடியும். வருகிற இடைத்தேர்தலில் விழித்தெழுந்து நிஜம் எது ,நிழல் எது என்று புரிந்து கொண்டு தமிழ் நாட்டு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்.
நம்பிக்கையோடு காத்திருப்போம் என கூறினார்.
இதையும் படிங்க: எதையும் உருப்படியா உருவாக்க வக்கில்ல... விஜய் அரசே வெட்கமே இல்லையா? - விடிந்ததுமே வெடித்தெழுந்த திமுக...!