×
 
☰

அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதை... தவெகவில் உச்சக்கட்ட புகைச்சல்... விஜயை வெளிச்சம் போட்டு காட்டிய ஆர்.பி.உதயகுமார்...!

விஜய் முதல்வராக தங்கள் சொத்துகளை விற்று ரசிகர் மன்றத்திலிருந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை எதிர்பார்ப்பு எதுவும் இன்றி விஜய் ரசிகர்கள் செய்து வந்தார்கள்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், ஆட்சிக்கு வந்த இந்த ஐந்து மாத காலத்தில் அடுத்த கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அங்கீகாரமும், அதிகாரமும் வழங்குவதன் மூலம் தவெகவை செல்வாக்குமிக்க கட்சியாக காட்சிப்படுத்த நினைக்கிறார்கள். கிராமத்தில் சொல்வார்கள் அரசனை நம்பி புருஷனை கைவிட்டது போல என்ற பழமொழிக்கு எடுத்துகாட்டாக அடுத்த கட்சியில் ஆண்டு அனுபவித்து வந்தவர்களை, அரசன் என நினைத்து அவர்களுக்கு ஆட்சியில் அமைச்சர் அதிகாரமும், கட்சியில் பதவி  அங்கீகாரம் வழங்கி வருகிறார்கள் 
 
செங்கோட்டையன் ,நிர்மல் குமார் என்று அடுத்த கட்சியில் இருந்து வந்தவர்களை அமைச்சர் ஆக்கினார் அடைக்கலம் ஆகி தஞ்சம் புகுந்தவர்களுக்கு அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளர் என்ற பதவிகளை வாரி வாரி வழங்குகிறார் விஜய்.

முதல்வர் விஜய் தருகின்ற முக்கியத்துவத்தையும் பார்த்து, விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து கடுமையாக பிரதிபலன் எதிர்பாராது உழைத்து வருகின்ற விஜய் ரசிகர்களுக்கு கௌரவமான அரசு சார்ந்த பதவிகள் வழங்குவது இல்லை.என்ற நிலையிலே, விஜய் முதல்வராக தங்கள் சொத்துகளை விற்று ரசிகர் மன்றத்திலிருந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை எதிர்பார்ப்பு எதுவும் இன்றி விஜய் ரசிகர்கள் செய்து வந்தார்கள்.

 ரசிகர் மன்றத்திலிருந்து குடும்பத்தை மறந்து விஜய்க்காக உழைத்து வரும் தங்களை புறக்கணித்துவிட்டு, அடுத்த கட்சிக்காரர்களுக்கு மட்டுமே உடனடியாக அரசு சார்ந்த கௌரவ பதவிகள் தருவதை எப்படி எங்களால் ஏற்றுக்கொள்ள முடியும்? இதை ஏற்றுக்கொண்டால், உழைத்து வருகின்ற நாங்கள் கட்சியிலும் ஆட்சியிலும் ஏன் முதல்வர் விஜயின் மனதிலும் காணாமல் போய்விடுவோம்? என்ற அச்சமும் கவலையும் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.  இதை விஜயின் ரசிகர்கள் புலம்புவது தேர்தல் களத்திலே இடைத்தேர்தல் களத்திலேயே கேட்க முடிந்தது; 

இதையும் படிங்க: ரசிகர் மன்றத்தில் இருந்து வந்த எங்களை புறக்கணிப்பதா? – த.வெ.க. தலைமைக்கு எதிராக அதிருப்தி குரல்!

அது தேர்தல் பணியிலும் எதிரொளிப்பதாக நமக்கு தகவல்கள், செய்திகள் கிடைத்திருக்கிறது. மக்கள் ஐந்தாண்டு கால ஆட்சியிலே அதிருப்தியோடு இருப்பதோடு, ஐந்து மாத கால ஆட்சியிலே விஜயின் ரசிகர்களும் விஜய் தொண்டர்படையும், ரசிகர் பட்டாளமும் அதிருப்தி அடைந்திருக்கிற செய்தி, முதல்வர் கவனத்திற்கு செல்ல வாய்ப்பில்லை.

 ஆனால் தேர்தலில் தோற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன், தேர்தலில் தோற்றுவிட்ட போதும், அமைச்சர் அந்தஸ்தில் உள்ள வாரியத் தலைவர் பதவியை முதல்வர் வழங்கினார். தற்போது இயல் இசை நாடகம் கொண்ட தலைவராக புஷ்பவனம் குப்புசாமி அதிமுகவிலிருந்து சென்றவருக்கு வழங்கியிருக்கிறார். சிங்கை ராமச்சந்திரனுக்கு ஸ்டார்ட்டப் தமிழ்நாடு தலைவர் பதவி வழங்கியிருக்கிறார்.

காஞ்சிபுரம் ரஞ்சித் குமாருக்கு அமைச்சராகவும் ஜேசிடி பிரபாகர் அவர்களுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இப்படி 109 பேர் அடுத்த கட்சியிலிருந்து போட்டியிட்டதிலே, வெற்றி பெற்ற 49 பேர்களில் அதில் ஏழு பேர்களுக்கு அடுத்த கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கி இருப்பதாக விஜயின் உண்மையான ரசிகர்கள் புலம்புகிறார்கள். 

அது போதாது என்று, தற்போது அமைச்சர் பதவிக்காக வெயிட்டிங் லிஸ்டிலே சத்தியபாமா, மரகதம் குமரவேல், சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா, உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராசு, எம்.சி. சம்பத், எம்.எஸ்.எம். ஆனந்தன், வைகைச் செல்வன், கலைராஜன், வெல்லமண்டி நடராஜன், திருச்சி வளர்மதி, சிவபதி என தவெகவில் சமீபத்திலே தஞ்சம் புகுந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் கனவோடு விஜயை சுத்தி சுத்தி வந்து தங்களுடைய ராஜ விசுவாசத்தை வெளிகாட்டி வருவதை பார்க்க சகிக்க முடியாத விஜயின் விசுவாச ரசிகர் பட்டாளமும் விஜயின் உண்மை தொண்டர்களும் இனியாவது விஜய் அவர்களுக்காக மட்டுமே வாழ்ந்து வரும் எங்களைப் போன்ற நிர்வாகிகளை ரசிகர்களை அரவணைத்து, அவர் மீதான அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக கௌரவமான அரசு பதவிகளையும் கட்சிப் பதவிகளையும் எங்களுக்கு முன்னுரிமையை அடிப்படையிலே வழங்க வேண்டும் என அதிருப்தி குரல் தாராபுரத்திலும், மதராந்தகத்திலும் கேட்க முடிந்தது.

 மின்சார வெட்டு, சட்ட ஒழுங்கு சீரழிவு, விலைவாசி உயர்வு, ஆடம்பரம், ஆர்ப்பாட்டம், ஊழல், இயலாமை, அரசாணை வெளியிட்டு வாபஸ் வாங்குவது, அரசாணையை வெளியிடாமல் மூடி மறைப்பது, அதோடு இன்றைக்கு நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம், செவிலியர்கள் போராட்டம், அரசு ஊழியர் போராட்டம், தூய்மை பணியாளர்கள் போராட்டம், பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் அமைவதை எதிர்த்து மீனவர்கள் போராட்டம், மின்வெட்டுக்கு எதிராக குடிநீர் பற்றாக்குறைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம், படுகொலை சம்பவங்களை பலியானவர்களுக்கு எதிர்த்து நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம், என அரசு ஊழியர்கள் போராட்டம் என தமிழகம் எங்கும் எங்கு பார்த்தாலும் மக்கள் வீதியிலே இறங்கி போராடி வருகிறார்கள். 

இந்த நிலையிலே, இந்த ஐந்து மாத தவெக ஆட்சியில் மக்களுக்காக திட்டங்கள் செயல்படுத்துவதை விட்டுவிட்டு, சர்வாதிகாரி போல் அடுத்த கட்சிகளை அபகரிக்க நினைக்கும் அழிக்க நினைக்கும் கலைக்க நினைக்கும் விஜய் சர்வாதிகாரத்தை விட்டுவிட்டு, மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த முன்வருவாரா? 

இந்த இடைத்தேர்தல் தீர்ப்புக்கு பிறகாவது பிற கட்சிகளை உருகுலைக்கும் வேலையை செய்யாமல், தேவையற்ற முறையிலே மக்கள் மீது திணிக்கப்படுகின்ற இடைத்தேர்தல்களை தடுத்து நிறுத்தி, ஜனநாயகத்தை காப்பாற்ற விஜய்க்கு தகுந்த தீர்ப்பை இந்த இரு தொகுதிகளில் வாக்காளர்கள் இடைத்தேர்தல் தீர்ப்பை வழங்க இருக்கிறார்கள் என்பதைத்தான் நேற்றைய வாக்குப்பதிவு நமக்கு நம்பிக்கை அளிக்கிறது. 

ஒன்பதாம் தேதி வர இருக்கின்ற வரலாற்று சிறப்புமிக்க ஜனநாயக தீர்ப்பை வரவேற்க, தமிழகமே காத்திருக்கிறது. உண்மைக்கும் தர்மத்துக்கும் நியாயத்துக்கும் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் சேவைக்கும் கடமை உணர்வுக்கும் மதிப்பளித்து, மாய பிம்பத்தை தள்ளி வைத்துவிட்டு, வசீகரத்தை தள்ளி வைத்துவிட்டு, பஞ்ச் டயலாக்கை உடைத்தெறிந்துவிட்டு, கவர்ச்சிக்கு மயங்காமல், நாம் ஜனநாயகத்தை வலிமை சேர்க்க இரு தொகுதிகளிலும் நல்ல தீர்ப்பு வரும் மக்கள் தீர்ப்பே மகேஷன் தீர்ப்பு என கூறினார்.

இதையும் படிங்க: விஜய்க்கு பயந்துதான் ராகுல் மவுனமா? தமிழக எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் திமுக புதிய கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share