கடன் வாங்கியவர்களுக்கு நிம்மதி! ஆர்பிஐ-யின் புதிய அறிவிப்பால் சுமை குறையும்
வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், தனியார் வங்கிகளில் கடன் வாங்கியவர்களுக்கு பெரிய நிம்மதியளிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்பிஐ) நேற்று ஓர் அறிவிப்பை வெளியி்ட்டுள்ளது.
வங்கியில் கடன் வாங்கியவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு முன்பாக மொத்தமாக திருப்பிச் செலுத்தினால் அற்கு வசீலிக்கப்படும் கட்டணம்(ப்ரீக்ளோசிங் சார்ஜ்) வசூலிப்பதை ரத்து செய்வது குறித்த வரைவு அறிக்கையை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி ப்ரீக்ளோசிங் சார்ஜ், அபராதம் என எதையுமே கடன் வாங்கியவர்களிடம் இருந்து வங்கிகள் இனிமேல் வசூலிக்கக்கூடாது என்பது இந்த ரிசர்வ் வங்கி வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை குறித்து மார்ச் 21ம் தேதிக்குள் மக்கள் தங்கள் கருத்துக்களை ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கலாம், அதன்பின் இந்த அறிக்கை இறுதி செய்யப்பட்டு உத்தரவாக எந்தெந்த கடன்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்பது தெரிவிக்கப்படும்.
பெரும்பாலும் சந்தை சூழலுக்கு ஏற்ப மாறும் தன்மை கொண்ட வட்டிவீதத்தைக் கொண்ட கடன்களுக்கு பொருந்தும். அனைத்து வர்த்தக வங்கிகள், லோக்கல் ஏரியா வங்கி, கூட்டுறவு வங்கிகள், வங்கி சாரா நிதிநிறுவனங்கள், வீட்டுவசதி நிதி நிறுவனங்கள், அனைத்து இந்திய நிதி நிறுவனங்களுக்கு இந்த வரைவு அறிக்கை பொருந்தும். தனிநபர் கடன்களுக்கு தற்போது அபராதமாக 4 முதல் 5 சதவீதம் விதிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காளியம்மாள் விலகல்..? தங்கச்சிக்கு அண்ணன் சீமான் கொடுத்த 2 வாய்ப்பு..!
வரைவு அறிக்கை சொல்வது என்ன?: சந்தை சூழலுக்கு ஏற்ப மாறக்கூடிய வட்டிவீதத்தைக் கண்ட தனிநபர் கடன்கள் வாங்கியவர் முன்கூட்டியே கடனை திருப்பி செலுத்த முன்வந்தால் அவர்களிடம் கட்டணம், அபராதம் ஆகியவைவசூலிக்க முடியாது. சிறு, குறு, நடுத்தர வங்கிகள் மற்றும தனிநபர்கள் முதல்தர மற்றும் 2ம் தர கூட்டறவு வங்கிகளிலும், வங்கி சாரா நிதிநிறுவனங்கில் கடன் பெற்றிருந்தாலும், கடனை திருப்பிச் செலுத்தும்போது கட்டணம், அபராதம் கிடையாது. கடன் வாங்கிய தொகை முழுவதையும் குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே உடனே திருப்பி செலுத்துகிறாரா அல்லது பகுதியாக திருப்பிச் செலுத்துகிறாரா என்பதைப் பொருத்து விதி பொருந்தும்.
கடன் தொகை வழங்கியபோது வாடிக்கையாளர்களிடம் ஏதேனும் மறைமுகக் கட்டணம், இருந்தால் அதை வங்கிகள் தெளிவுபடுத்த வேண்டும். கடன் முன்கூட்டியே செலுத்தும்போது எந்தவிதமான அபராதம், பிடித்தம் ஆகியவற்றை செய்யக்கூடாது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ரூ.7.50 கோடிவரை கடன் பெற்றிருந்தாலும், முன்கூட்டியே கடன் தொகையை மொத்தமாக திருப்பிச் செலுத்த முன்வந்தால், அவர்களுக்கு அபராதம், கட்டணம் ஏதும் கிடையாது. கடன் திருப்பிச் செலுத்த வங்கிகள் விதித்துள்ள லாக்கிங் ப்ரீயட் என்ற விதிமுறை இதற்குப் பொருந்தாது. அதாவது தனிநபர்ஒருவர் வங்கியில் கடன் பெற்றிருந்தால், உதாரணமாக ஓர் ஆண்டு லாக்கிங் காலம் என்று சில வங்கிகள் அறிவிக்கும். இந்த லாக்கிங் காலத்துக்குள் கடன் தொகையை முன்கூட்டியே கடனை திருப்பிச் செலுத்த முயலக முடியாது.
ஓர் ஆண்டு தவணை, வட்டியைச் செலுத்தியபின்புதான் கடனை மொத்தமாக செலுத்த முடியும். இந்த லாக்கிங் காலமும் ஆர்பிஐ உத்தரவால் செல்லாது கடன் தொகையை முன்கூட்டியே செலுத்த முன்வரும் வாடிக்கையாளர்களை நோகடிக்கும் வகையில் 3 சதவீதம் வரை கடன் தொகையில் கட்டணம், 5 சதவீதம் அபராதம் விதித்து ஏன் கடனை செலுத்துகிறோம் என்று வங்கிகள் நோகடிக்கும். உதாரணமாக வங்கியில் 5 லட்சம் தனிநபர் கடன் பெற்றஒருவர் ஒரு லட்சம் செலுத்தியபின் மீதமுள்ள ரூ.4 லட்சத்தை மொத்தமாக செலுத்த விரும்பினால், அந்த ரூ.4 லட்சத்துக்கு 3 சதவீதம் சார்ஜ் வீதம் ரூ.12 ஆயிரம், அபராதம் 5 சதவீதம் என ரூ20 ஆயிரம் பிடுங்கிவிடுவார்கள்.அதனால் ரூ.4 லட்சத்துக்கு ரூ.4.32 லட்சம் செலுத்த வேண்டும். ஆர்பிஐ உத்தரவால் இனிமேல் இந்தத் தொந்தரவுகள் கடன் பெற்றவர்களுக்கு இருக்காது.
இதையும் படிங்க: எமனாக மாறிய இ - பைக்.. பேட்டரி வெடித்து பெண் பரிதாப பலி..!