×
 

ஹை அலர்ட்டில் சென்னை! ட்ரோன்கள் பறக்க தடை! 60 நாட்கள் தடை உத்தரவை நீட்டித்த காவல்துறை!!

குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் வீடு முதல் மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை வரை ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

சென்னை: இந்தியாவின் 77-வது குடியரசு தின விழா வரும் திங்கள்கிழமை (ஜனவரி 26, 2026) சென்னையில் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே நடைபெறும் முக்கிய விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைக்க, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலை வகிக்க உள்ளார். இதையொட்டி, சென்னை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் தலைமையில், விழா நடைபெறும் உழைப்பாளர் சிலை பகுதி, முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டிலிருந்து விழா நிகழ்விடத்துக்கு செல்லும் சாலைகள், கவர்னர் ரவி வரும் வழித்தடங்கள் ஆகியவை சிவப்பு மண்டலம் (Red Zone) என அறிவிக்கப்பட்டுள்ளன. 

இந்த பகுதிகளில் ட்ரோன்கள், ரிமோட் கண்ட்ரோல் விமானங்கள் (RPAS), பறக்கும் கிளைடர்கள், லேசர் கற்றை விளக்குகள், சூடான காற்று பலூன்கள், ஒளி உமிழும் பொருட்கள் உள்ளிட்ட எந்தவித பறக்கும் பொருட்களையும் பறக்கவிடுவதற்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டார்கெட் ‘26–26’! இந்தியாவில் புகுந்து தாக்க பாக்., பயங்கரவாதிகள் சதி!! குடியரசு தினத்தில் பகீர்! ஹை அலர்ட்!

மேலும், சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள வான்வெளியிலும் இதே தடை அமலில் உள்ளது. இந்த தடை உத்தரவு நேற்று (ஜனவரி 23) முதல் மார்ச் 23 வரை சுமார் 60 நாட்களுக்கு அமலில் இருக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது. விழா நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போலீஸார், கமாண்டோ படை, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பிரிவினர், ஸ்னைப்பர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

பொதுமக்கள் விழாவில் பங்கேற்க வரும் போது, அடையாள அட்டை, அழைப்பிதழ் போன்றவற்றை கொண்டு வர வேண்டும். தேவையற்ற பொருட்களை எடுத்து வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றங்கள், சாலை மறியல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

குடியரசு தின விழா என்பது நமது அரசியலமைப்பின் வெற்றி நாள். இந்த ஆண்டு சென்னையில் நடைபெறும் விழா, தமிழக மக்களின் ஒற்றுமை மற்றும் தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையில் கோலாகலமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளை முழுமையாக பின்பற்றி, அனைவரும் பாதுகாப்புடன் விழாவை கொண்டாட வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: இறுதிக்கட்டத்தை எட்டிய ஒப்பந்தம்!! இந்தியாவுக்கு குட் நியூஸ்! ஐரோப்பிய யூனியன் தலைவர் தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share