மிக பெருமை..! ஆப்ரேஷன் சிந்தூர்... வெற்றியை காட்சிப்படுத்திய அலங்கார ஊர்தி..!
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றியை காட்சிப்படுத்தும் விதமாக குடியரசு தின விழாவில் அலங்கார உறுதி அணிவகுப்பு நடைபெற்றது.
இந்தியாவின் 77வது குடியரசு தின விழா இன்று டெல்லியின் கடமைப் பாதையில் மிகுந்த விமர்சையுடனும் தேசபக்தி உணர்வுடனும் நடைபெற்றது. இந்த ஆண்டு அணிவகுப்பு சாதாரணமானதல்ல. கடந்த ஆண்டு நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் எனும் முக்கிய ராணுவ நடவடிக்கையின் வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடும் வகையில், இந்திய ராணுவத்தின் வலிமையையும் ஒருங்கிணைந்த போர் திறனையும் பறைசாற்றும் விதமாக அமைந்திருந்தது.
இந்த அணிவகுப்பு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட இந்த விழாவில், ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் வீரர்கள் ஒருங்கிணைந்து அணிவகுத்து சென்றனர். பாரம்பரிய உடைகளில் அணிவகுத்த படைகள், நவீன ஆயுதங்கள், டாங்கிகள், ஏவுகணை அமைப்புகள் என அனைத்தும் இந்தியாவின் ராணுவ வலிமையை உலகிற்கு உணர்த்தின.
இந்த அணிவகுப்பின் மிக முக்கியமான அம்சமாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை காட்சிப்படுத்திய திரி-சர்வீசஸ் அலங்கார ஊர்தி இடம்பெற்றிருந்தது. "Operation Sindoor: Victory Through Jointness" என்ற தலைப்பில் அமைக்கப்பட்ட இந்த அலங்கார ஊர்தி, இந்திய ராணுவத்தின் ஒருங்கிணைந்த போர் உத்தியையும், தொழில்நுட்ப வலிமையையும், துணிச்சலான செயல்பாடுகளையும் பிரதிபலித்தது. ஆபரேஷன் சிந்தூர் 2025இல் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத தாக்குதல்களுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட துல்லியமான ராணுவ நடவடிக்கை.
இதையும் படிங்க: பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்..!! முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குடியரசு தின வாழ்த்து..!!
இதில் ட்ரோன் தாக்குதல்கள், பிரமோஸ் ஏவுகணைகள், S-400 வான் பாதுகாப்பு அமைப்பு, ரஃபேல் போர் விமானங்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு, பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, எதிரியின் தாக்குதல் திட்டங்கள் முறியடிக்கப்பட்டன. இந்த அலங்கார ஊர்தியில் ஆபரேஷன் சிந்தூரின் முக்கிய காட்சிகள் உயிரோட்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தன. பிரமோஸ் ஏவுகணை, ஆகாஷ் ஏவுகணை, அர்ஜுன் மற்றும் பிஷ்மா டாங்கிகள், அபாச்சி மற்றும் த்ருவ் ஹெலிகாப்டர்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
இதையும் படிங்க: முதன்முறையாக குடியரசு தின விழாவில் விலங்குகள் அணிவகுப்பு..! தமிழ்நாட்டு ரக நாய்கள் பங்கேற்பு..!