அம்பானி வீட்டு பூஜையில் பாப் பாடகி ரிஹானா பங்கேற்பு!! நடனமாடி, பூக்கள் தூவி மகிழ்ச்சி!!
மும்பையில் தொழிலதிபர் அம்பானி வீட்டில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பிரபல பாப் பாடகி ரிஹானா கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.
மும்பை: உலகப் பிரபல பாப் பாடகியும் அழகுசாதனப் பிராண்ட் உரிமையாளருமான ரிஹானா மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்லமான அந்திலியாவுக்கு வருகை தந்து, அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு இந்திய பாரம்பரிய வழிபாட்டில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
ரிஹானா தனது பிரபல அழகுசாதனப் பிராண்டான Fenty Beautyஐ இந்தியாவில் அறிமுகம் செய்யும் நோக்கில் மும்பைக்கு வந்துள்ளார். இதன் ஒரு பகுதியாக அவர் அம்பானி குடும்பத்தினரின் அழைப்பின் பேரில் அந்திலியா இல்லத்துக்கு சென்றார். அங்கு ஈஷா அம்பானி, ஸ்லோகா மேத்தா, ராதிகா மெர்ச்சன்ட் மற்றும் ஆனந்த் அம்பானி உள்ளிட்டோர் அவருக்கு பாரம்பரிய இந்திய நடன நிகழ்ச்சிகளுடன் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
பின்னர், அம்பானி குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு பூஜையிலும் ஆரத்தியிலும் ரிஹானா முழுமையாக பங்கேற்றார். மலர்களைத் தூவி பூக்களின் ஹோலி (Phoolon Ki Holi) விளையாடிய அவர், அம்பானி குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தார். பூஜைக்குப் பிறகு அவருக்கு பிரமாண்டமான மதிய உணவு விருந்தும் வழங்கப்பட்டது. இந்திய கலாச்சாரம், நடனம் மற்றும் பாரம்பரியத்தை அனுபவித்த ரிஹானாவின் முகத்தில் மகிழ்ச்சி பளிச்சிட்டது.
இதையும் படிங்க: கொளுத்தும் கோடை வெயில்.. பட்டாசு ஆலைகளுக்கு பறந்த கட்டுப்பாடுகள்..!! மத்திய அரசு அதிரடி..!!
இது ரிஹானாவின் இரண்டாவது இந்தியப் பயணம் ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சியில் பாடுவதற்காக அவர் இந்தியா வந்திருந்தார். இம்முறை அழகுசாதனப் பிராண்ட் விளம்பரத்துக்காக வந்த அவர், அம்பானி குடும்பத்துடன் நெருக்கமான நேரத்தை செலவிட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
ரிஹானா அம்பானி இல்லத்தில் பூஜை செய்து, மலர்களுடன் ஆடிய வீடியோக்கள் இன்ஸ்டாகிராம், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. பலர் இந்திய கலாச்சாரத்தை அவர் அன்புடன் ஏற்றுக்கொண்டதைப் பாராட்டி வருகின்றனர். Fenty Beauty இந்தியாவில் Tira Beauty மற்றும் Sephora India மூலம் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு இரு தரப்புக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ரிஹானாவின் இந்திய வருகை குறித்து ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படிங்க: காற்று எரிசக்தி.. உலகளவில் இந்தியா 4ம் இடம்..!! மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம்..!!