×
 

சினிமா பாணியில் போராட்டக்காரர்களை திசை திருப்பிய போலீஸ்... பரபரப்பான சூழலில் சிக்கந்தர் தர்காவில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்...! 

திருப்பரங்குன்றத்தில் திரைப்பட பாணியில் அனைவரையும் திசைதிருப்பி மாட்டு வண்டியில் வைத்து ஒரு கொடியை அனுப்பிவிட்டு வேறு ஒரு கொடியை அவசர அவசரமாக மலைக்கு எடுத்துச் சென்று சம்பவம் அரங்கேறியுள்ளது. 

திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி தற்போது அது தொடர்பான வழக்கு விசாரணையில் உள்ள நிலையில் வருகிற ஜனவரி 6ஆம் தேதி பெரிய ரத வீதியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா சந்தனக்கூடு விழா நடைபெற உள்ளது. இதற்காக 21 ஆம் தேதி மலை மேல் உள்ள தர்காவில் கொடியேற்ற நிகழ்வு நடைபெறுவதற்காக அனுமதி கேட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமங்கலம் கோட்டாட்சியர் சிவஜோதி முன்னிலையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

முதலில் வழக்கம் போல் மலைக்குக் கீழ் உள்ள பள்ளிவாசலில் கொடியேற்றப்பட்டது. பெரியார் ரத வீதியில் உள்ள தர்காவில் இருந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் கொடி எடுத்துச் செல்லப்பட்டு பெரிய ரத வீதி, கீழ ரத வீதி,16 கால் மண்டபம் வழியாக மீண்டும் பள்ளிவாசலை அடைந்து மாட்டு வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட கொடி பள்ளிவாசலில் தொழுகைக்கு பின்னர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளிவாசலில் இருந்து கொடிமரத்துடன் ஊர்வலம் சென்ற நிலையில் மலையில் ஏற்றப்படும் கொடி கம்பத்தை போலீஸ் பாதுகாப்புடன் பத்துக்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் மலைக்கு கொண்டு சென்றதால் ஆத்திரமடைந்த கோட்டை தெரு பொதுமக்கள் அவர்கள் மலை மீது அனுப்பப்பட்டதை போல நாங்களும் மலை மீது தீபம் ஏற்ற செல்வோம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

களை அனுமதிக்காமல் இஸ்லாமியர்களை மட்டும் அழைக்க செல்ல அனுமதித்ததால் பழனி ஆண்டவர் தெருவில் உள்ள குடியிருப்பு வாசிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரண்டு போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமியர்களை மட்டும் அனுமதிக்கும் போலீசார் தங்களை ஏன் தீபம் ஏற்று அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டி போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அப்பகுதி மக்கள்கையில் அகல் விளக்கை ஏந்தி மலை மேல் தீபம் ஏற்ற செல்வதாக கூறி அரோகரா கோசமிட்டு போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தடுப்பை தாண்டி செல்ல முயன்றனர் போலீசார் அவர்களை நடத்தி நிறுத்தினர். 

இதையும் படிங்க: பற்றி எரியும் திருப்பரங்குன்றம் விவகாரம்... இரவோடு, இரவாக மக்கள் செய்த காரியம்... திடுக்கிட்ட திமுக அரசு...!

இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்தவர்களை திருநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆறு மணியை கடந்தும் விடுவிக்காததால் அவர்களை விடுவிக்க கோரி பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருமங்கலம் மதுரை சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அதன் பின்னர் மாட்டு வண்டியில் வைத்து ஒரு கொடி ரதவீதிகளில் உலா வருவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது. மாட்டு வண்டியுடன் வரும் கொடியை மேலே எடுத்துச் செல்ல விடாமல் தடுப்பதற்காக பழனி ஆண்டவர் கோவில் பகுதியை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் தயாராக இருந்த நிலையில். அனைவரின் கவனமும் மாட்டு வண்டியில் எடுத்துச் செல்லப்பட்ட கொடி மீது இருந்தது. இந்த நிலையில் திரைப்பட பாணியில் அனைவரையும் திசை திருப்பும் விதமாக மாட்டு வண்டியில் ஒரு கோடி எடுத்துச் செல்ல மற்றொரு இருபதுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் எடுத்துச் சென்று பழனியாண்டவர் கோவில் வழியாக காவல்துறையினர் பாதுகாப்புடன் மலைக்கு எடுத்துச் சென்றனர்.  ஏற்கனவே மலை மேல் ஏற்றக்கூடிய கொடிக்கம்பத்தை பத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் மலை பாதை வழியாக மலை மேல் உள்ள தர்காவிற்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து மற்றொரு பாதையில் கையில் அகல் விளக்குடன் சென்று தீபம் ஏற்ற முயற்சித்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தாங்கள் கொண்டு வந்த தீபத்தை பழனியாண்டவர் கோவிலில் ஏற்ற அனுமதி தாருங்கள் என கூறியதால் ஒருவருக்கு மட்டும் அனுமதி அளித்ததால் கோவில் முன்பு பெண் ஒருவர் விளக்கேற்றி வழிபாடு செய்தார். பல்வேறு பரபரப்புகளுக்கு பின் திரைப்பட பாணியில் போராட்டக்காரர்களை திசை திருப்பிவிட்டு, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி கொடியேற்றப்பட்டது. 
 

இதையும் படிங்க: “முருக பக்தர்கள் மனதை புண்படுத்தாதே...” - அமைச்சர் சேகர் பாபுவுக்கு நேரடி எதிர்ப்பு... திருப்பரங்குன்றம் மக்கள் எடுத்த திடீர் முடிவு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share