மதமாற்ற வழக்கில் கைதான சங்கூர்பாபா..! ரூ.40 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை அதிரடி..!
மதமாற்ற வழக்கில் கைதாகி உள்ள சங்கர் பாபாவின் 40 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் மதமாற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சங்கூர் பாபா எனப்படும் மதகுரு ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு, மதமாற்றம் தொடர்பான சர்ச்சைகளையும், சட்ட அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளையும் மையப்படுத்தி, பல்வேறு தரப்பினரிடையே விவாதங்களை உருவாக்கியது. இந்த நிலையில் சங்கூர் பாபாவின் 40 கூடிய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
சங்கூர் பாபா, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு மதகுரு. இவர் மதம் மற்றும் ஆன்மீகம் தொடர்பாக பலரை ஈர்த்தவர். இவரது உண்மையான பெயர் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் பொதுவெளியில் முழுமையாக வெளியாகவில்லை, ஆனால் இவர் மதமாற்றம் தொடர்பான செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உத்தரப் பிரதேசத்தில் உள்ள சில கிராமப்புறங்களில் இவருக்கு பின்தொடர்பவர்கள் இருப்பதாகவும், இவர் மத நம்பிக்கைகளைப் பயன்படுத்தி மக்களை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மாற்ற முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. உத்தரப் பிரதேச மதமாற்றத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சட்டம், வற்புறுத்தல், மிரட்டல், பணம், அல்லது பிற ஊக்கங்களைப் பயன்படுத்தி மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்கிறது.
இந்த வழக்கில், சங்கூர் பாபாவின் செயல்கள் இந்தச் சட்டத்தை மீறியதாகக் கருதப்பட்டுள்ளன. சங்கூர் பாபா, ஆன்மீக உரைகள் மற்றும் மதச் சடங்குகளைப் பயன்படுத்தி, மக்களை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மாற்ற முயற்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக பணம், வேலைவாய்ப்பு, அல்லது பிற உதவிகளை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இவர் தனது ஆன்மீக செல்வாக்கைப் பயன்படுத்தி, குறிப்பாக பின்தங்கிய மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமான மக்களை மதமாற்றத்திற்கு இலக்காக்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் தம்பி மீதான CBI வழக்கில் தலைகீழ் திருப்பம்.. ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு..!
மேலும், மதமாற்ற நடவடிக்கைகளுக்கு நிதி பெறப்பட்டதாகவும், இதற்காக சட்டவிரோத முறையில் பணம் சேகரிக்கப்பட்டதாகவும் அமலாக்கத் துறை சந்தேகிக்கிறது. இதன் காரணமாக, உத்தரப் பிரதேசத்திலும் மும்பையிலும் இவரது இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. இதனை எடுத்து அவர் கைது செய்யப்பட்ட நிலையில் சங்கர் பாபாவின் 40 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இதையும் படிங்க: கிட்னி வியாபார பொருளா? செல்வபெருந்தகை ஆவேசம்..!