×
 

சாத்தான்குளம் சம்பவம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம்.. நிவாரணம் அறிவித்தார் முதல்வர்..!

சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் ஆம்னி வேன் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நடக்கும் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கோவையில் இருந்து 8 பேருடன் ஒரு ஆம்னி கார் புறப்பட்டு வந்துள்ளது. இந்த காரை மோசஸ் என்ற 50 வயது நபர் ஓட்டி வந்துள்ளார். நேற்று மாலை 4 மணியளவில் சாத்தான்குளம் அருகே சிந்தாமணிக்கும் மீரான்குளத்துக்கும் இடையே கார் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தது.

இதை அடுத்து சாலை ஓரத்தில் இருந்த கிணற்றுக்குள் கார் விழுந்து மூழ்கியது. இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையிர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: கிணற்றுக்குள் சீறிபாய்ந்த கார்... எடுக்க எடுக்க வரும் சடலங்கள்... சாத்தான்குளத்தில் சோகம்!!

அந்தக் கிணறு சுமார் 50 அடி ஆழம் கொண்டது என்பதால், சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக தேடியும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ஜேசிபி, கிரேன் இயந்திரங்கள் உதவியுடன் மீட்பு பணி தொடரப்பட்டது.

பெரும் போராட்டத்திற்கு பின் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். பின்னர் 4 மணி நேரத்திற்கு பிறகு வசந்தா, மோசஸ், ரவி கோவில் பிச்சை, கெஞ்சி அல்கிருபா மற்றும் ஒன்றரை வயது குழந்தையான ஷாலினியன் ஆகிய ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து அறிந்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தான் மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், வேதனை அடைந்ததாகவும் தெரிவித்தார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார். 

இதனிடையே உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கிணற்றுக்குள் 20 சவரன் நகைகள் இருப்பதாக தெரிவித்தனர். இதனையடுத்து தூத்துக்குடி முத்து குளிக்கும் மீனவர்கள் வரவழைக்கப்பட்டு கிணற்றுக்குள் நகைகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.   
 

இதையும் படிங்க: கிணற்றுக்குள் சீறிபாய்ந்த கார்... எடுக்க எடுக்க வரும் சடலங்கள்... சாத்தான்குளத்தில் சோகம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share