×
 

அடிச்சு நொறுக்க போறாங்க... எல்லாத்துக்கும் காரணம் கமிஷனர் அருண் தான்...! சவுக்கு சங்கர் பரபரப்பு தகவல்

சவுக்கு மீடியா அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப் போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது என சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

சாதாரண அரசு ஊழியராகத் தொடங்கி, ஊழல் வெளிப்பாட்டாளராகவும், யூடியூப் ஊடகவியலாளராகவும் உருவெடுத்த சவுக்கு சங்கர்… சவுக்கு என்ற இணையதளமும், சவுக்கு மீடியா என்ற யூடியூப் சேனல் மூலமும் துணிச்சலுடன் கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். அவரது விமர்சனங்கள் அரசியல் கட்சிகளையும், அதிகாரிகளையும் தொடர்ந்து சவால் செய்து வருவதால், அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

2024 மே மாதம் கோவையில் காவல்துறையை அவதூறு செய்ததாகக் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர், ஜாமினில் விடுவிக்கப்பட்ட பின்னரும் தனது விமர்சனங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.  சமீபத்தில் சவுக்கு சங்கர் வீட்டில் கழிவு நீர் ஊற்றப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தூய்மை பணியாளர்களை சவுக்கு சங்கர் அவதூராக பேசியதாக கூறி 50 பேர் கொண்ட கும்பல் சவுக்கு சங்கர் இல்லாத நேரத்தில் அவரது தாயார் இருக்கும்போது வீட்டில் கழிவு நீரை ஊற்றிவிட்டு சென்றனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சவுக்கு மீடியா அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விருதுநகர் தொகுதி யாருக்கு? திமுக - காங்.,, கூட்டணியில் நடக்கும் உள்ளடி வேலைகள்!

சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆதரவோடுதான் இந்த தாக்குதல் அரங்கேற இருப்பதாக சொல்லப்படுகிறது என்று தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டார். வீட்டின் முகவரியை சொல்லி கழிவுநீர் ஊற்ற ஆள் அனுப்பியதும், 2 மணி நேரத்துக்கு குற்றவாளிகளை பாதுகாத்ததும் அருண்தான் என்றும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். இன்றைய தாக்குதலும் அருண் உத்தரவில்தான் நடக்க இருக்கிறது என்றும் இன்னும் எத்தனை நாள் இந்த அராஜகங்கள் நடக்கும் என்பதையும் பார்ப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வீடியோ அனுப்புறியா? இன்டர்னல் மார்க்ல கை வைக்கவா.. பாலியல் தொல்லை குறித்து மாணவியின் அதிர்ச்சியூட்டும் ஆடியோ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share