×
 

ATM-ல் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.15 கட்டணம்! யாருக்கெல்லாம் பொருந்தும்? SBI விளக்கம்!

வரும் அக்டோபர் 1 முதல் அடிப்படை சேமிப்பு வைப்பு கணக்கு (BSBDA) வைத்திருப்பவர்களுக்கு ஏ.டி.எம்., பணம் எடுப்பதில் புதிய கட்டண விதிமுறை அமலுக்கு வருகிறது.

எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்., மூலம் பணம் எடுப்பது தொடர்பாக புதிய கட்டணம் குறித்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஆனால், இந்தக் கட்டணம் அனைத்து சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தாது என வங்கி அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

வரும் அக்டோபர் 1 முதல் அடிப்படை சேமிப்பு வைப்பு கணக்கு (BSBDA) வைத்திருப்பவர்களுக்கு ஏ.டி.எம்., பணம் எடுப்பதில் புதிய கட்டண விதிமுறை அமலுக்கு வருகிறது. இந்தக் கணக்கு பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு குறைந்தபட்ச இருப்புத்தொகை கட்டாயம் இல்லாமல் வங்கி சேவைகளைப் பெறுவதற்காக உருவாக்கப்பட்டது.

அதன்படி, BSBDA கணக்கு வைத்திருப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் முதல் நான்கு முறை பணம் எடுப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. ஆனால், நான்கு முறைக்கு மேல் ஏ.டி.எம்., மூலம் பணம் எடுத்தால், ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.15 மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: BANK மேனேஜருக்கு பளார்..! என்ன நடந்துச்சு..? மு.க. அழகிரி மகளிடம் போலீஸ் விசாரணை..!

முக்கியமாக, இந்த விதிமுறை வழக்கமான எஸ்.பி.ஐ., சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது. அவர்கள் தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, தகுதியான ஏ.டி.எம்., பரிவர்த்தனைகளில் மாதத்திற்கு ஐந்து முறை வரை இலவசமாக பணம் எடுக்கலாம். எனவே, “எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்கள் அனைவரும் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் செலுத்த வேண்டும்” என்ற தகவல் தவறானது என வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு இந்த மாற்றம் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆன்லைன் மற்றும் பிற டிஜிட்டல் வங்கி பரிவர்த்தனைகளை வழக்கம்போல் மேற்கொள்ளலாம்.

வங்கிகளில் நேரடி பணப் பரிவர்த்தனையை குறைத்து, டிஜிட்டல் சேவைகளை ஊக்குவிக்கும் நோக்கத்திலும் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், BSBDA கணக்கை அதிகம் பயன்படுத்தும் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் ஏ.டி.எம்., கட்டணம் சுமையாக மாறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் வசிக்கும் 90,000 இலங்கை தமிழர்களுக்கு குட் நியூஸ்! நாடு திரும்ப புதிய சலுகை அறிவிப்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share