SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு...!! நவம்பர் 30-க்குப் பிறகு இந்த சேவைகள் நிறுத்தம்...!
SBI-யின் m-cash சேவை. நவம்பர் 30-க்குப் பிறகு இந்த சேவையானது நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. mCash சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இது நவம்பர் 30 க்குப் பிறகு நடைமுறைக்கு வரும் என்று தெளிவுபடுத்தியுள்ளது.
நாட்டில் உள்ள பொதுத்துறை வங்கிகளில், SBI முதலிடத்தில் உள்ளது. இந்த வங்கியில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கான மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த வங்கி கிளைகளுக்கு வருகை தருகின்றனர். இது பல வகையான சேவைகளை வழங்குகிறது. வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்தல் மற்றும் திரும்பப் பெறுதல், நிலையான வைப்புத்தொகை, கடன்கள், காசோலை புத்தகங்கள், பாஸ் புத்தகங்கள், அரசு திட்டங்கள்.
மேலும் காலம் மாறும்போது நாளுக்கு நாள் டிஜிட்டல் வடிவத்தில் சிறந்த சேவைகளை வழங்குவதில் எஸ்பிஐ முன்னிலையில் உள்ளது. இந்த வரிசையில் ஏற்கனவே பல்வேறு செயலிகளைக் கொண்டு வந்துள்ளது. இப்போது, டிஜிட்டல் பணம் செலுத்துதல் தொடர்பாக ஒரு வகையான சேவையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: துணை முதல்வர் சிராக் பஸ்வான்?! ஜீரோ To ஹீரோ!! பீகாரை புரட்டிப்போட்ட இளம் புயல்!
அதுதான் SBI-யின் m-cash சேவை. நவம்பர் 30-க்குப் பிறகு இந்த சேவையானது நிறுத்தம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
SBI இணைய வங்கி மற்றும் YONO Lite பயன்பாடுகளில் தற்போது கிடைக்கும் mCash (பணத்தை அனுப்புதல் மற்றும் கோருதல்) சேவைகள் நவம்பர் 30-க்குப் பிறகு கிடைக்காது என அறிவித்துள்ளது. M-Cash என்பது SBI வாடிக்கையாளர்கள் பயனாளியின் வங்கிக் கணக்கை முன்கூட்டியே பதிவு செய்யாமல், அவர்களின் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியைப் பயன்படுத்தி இன்டர்நெட் பேங்கிங் மூலம் பணத்தை அனுப்பவும், பெறவும் அனுமதிக்கும் ஒரு சேவையாகும். இது விரைவில் நிறுத்தப்படவுள்ளது.
எம்-கேஷ் சேவைகள் நிறுத்தப்படும் நிலையில், மூன்றாம் தரப்பு கணக்குகளுக்கு நிதியை மாற்றுவதற்கு வாடிக்கையாளர்கள் பிற பாதுகாப்பான மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று எஸ்பிஐ தெளிவுபடுத்தியுள்ளது. இந்த மாற்று முறைகளில் UPI, RTGS, IMPS, NEFT போன்றவை அடங்கும்.
எம் கேப் போலவே, UPI மூலம் அனுப்ப முதலில் பயனாளியைப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. BHIM SBI Pay செயலி அல்லது YONO அல்லது YONO Lite மூலம் மொபைல் எண் அல்லது கணக்கு விவரங்களுடன் நீங்கள் எளிதாக பணம் அனுப்பலாம்.
ஆனால் IMPS மூலம் வங்கிகளுக்கு இடையே 24x7 எந்த நேரத்திலும் பணப் பரிமாற்றம் செய்யலாம். ஆன்லைன் பேங்கிங் மூலம், பயனாளியின் கணக்கு எண் மற்றும் IFSC குறியீடு மூலம் பணத்தை அனுப்ப முடியும். NEFT ஐப் பொறுத்தவரையில் .
வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு இடையில் பணத்தை மாற்றுவதற்கு இது பாதுகாப்பானது. பெரிய பணப் பரிவர்த்தனைகளுக்கு RTGS பயன்படுத்தப்படலாம். இங்கே, தீர்வு கிட்டத்தட்ட உண்மையான நேரத்தில் நடக்கும்.
இதையும் படிங்க: பீகாரில் NDA வெற்றிக்கு இது தான் காரணம்... ஜன் சுராஜ் கட்சி பகிரங்க குற்றச்சாட்டு..!