×
 

மக்களே கவனிங்க..! SBI ஊழியர்கள் STRIKE...! பணப்பரிவர்த்தனை சேவைகள் பாதிக்கும் அபாயம்..!

எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஊழியர்கள் மே 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் இரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். அகில இந்திய எஸ்பிஐ ஊழியர் கூட்டமைப்பு  சார்பில் அறிவிக்கப்பட்ட இந்தப் போராட்டம், ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியே நடைபெறுகிறது.

ஊழியர்கள் சார்பில் 16 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் முக்கியமானவை கிளைகளில் போதிய ஊழியர்களை நியமித்தல், ஆயுதப் பாதுகாவலர்கள் பணியிடங்களை நிரப்புதல், நிரந்தரப் பணிகளை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு வழங்குவதை நிறுத்துதல், ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகள், ஊதிய சமநிலை, பணி முன்னேற்றம், மருத்துவச் செலவுத் திருப்பித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கும்.

புதிய நியமனங்கள் இல்லாதது, கிளைகளில் ஊழியர் பற்றாக்குறை, அதிக வேலைப்பளு உள்ளிட்ட பிரச்சினைகள் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. இந்த வேலை நிறுத்தத்தால் SBI வங்கியின் கிளைச் சேவைகள் பெருமளவு பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...! 40 மணி நேர வேட்டை... 2வது குற்றவாளியை தட்டி தூக்கிய போலீஸ்..!

பணம் செலுத்துதல், பணம் பெறுதல், கணக்கு தொடர்பான பணிகள், கடன் வழங்கல் போன்ற முக்கிய சேவைகள் தடைபட வாய்ப்பு உள்ளது. எனினும், ஏடிஎம் சேவைகள் மற்றும் மொபைல் பேங்கிங், இணைய வங்கி சேவைகள் போன்ற டிஜிட்டல் சேவைகள் பெரும்பாலும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், பரிவர்த்தனைகளில் சில தாமதங்கள் ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நீட் தேர்வை ஒழிக்கணும்..! மக்களுக்கான பிரச்சனை இது... திருமாவளவன் கண்டன உரை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share