×
 

BREAKING: போலீசாரை கத்தியால் விரட்டிய மர்ம நபர்! திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவிலில் பரபரப்பு!

திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் அருகே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்த முயன்ற பரபரப்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்காப்புக்காகக் காவலர் தனது பெல்ட்டைக் கழற்றிச் சண்டையிட்ட நிலையில், அங்கிருந்த மற்ற போலீசார் அந்த வாலிபரைக் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்த வேளையில் இந்தத் தாக்குதல் முயற்சி அரங்கேறியுள்ளது. மர்ம நபரின் இந்த ‘திடீர்’ ஆவேசத்தால் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அலறியடித்து ஓடியதால் அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளித்தது.

திருப்பூர் நகரின் பிரசித்தி பெற்ற வீரராகவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதைக் காண்பதற்கும், பெருமாளைத் தரிசிப்பதற்கும் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கூட்டத்திற்குள் நுழைந்த மர்ம வாலிபர் ஒருவர், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசாருடன் திடீரென வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க: "அரசியல் வேறு.. நட்பு வேறு!" தமிழிசையுடன் கரம் கோர்த்த கனிமொழி! இணையத்தை கலக்கும் புகைப்படம்! 

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அங்கிருந்த காவலரை நோக்கித் தாக்கப் பாய்ந்தார். இதனால் நிலைகுலைந்த காவலர், சற்றும் தாமதிக்காமல் மின்னல் வேகத்தில் தனது இடுப்பு பெல்ட்டை கழற்றி அந்த நபரைத் தடுத்துத் தற்காத்துக் கொண்டார். காவலரைத் துரத்தித் துரத்திக் கத்தியால் குத்த முயன்ற அந்த நபரின் செயலால் கோவிலில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் பீதியில் உறைந்தனர். உடனே அங்கிருந்த மற்ற போலீசார் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து, கத்தியுடன் ஆவேசமாக நின்ற அந்த வாலிபரைக் கீழே தள்ளி மடக்கிப் பிடித்தனர்.

கைது செய்யப்பட்ட நபரைத் தெற்கு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எதற்காகக் கத்தியுடன் கோவிலுக்கு வந்தார்? மனநலம் பாதிக்கப்பட்டவரா அல்லது திட்டமிட்டுக் கலவரம் செய்ய முயன்றாரா? என்ற கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. புனிதமான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வின் போது, காவலர் மீதே கத்தி வீசப்பட்ட இச்சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருப்பூரில் இன்று முதல்வர் ஸ்டாலின்..!! பிரம்மாண்டமாக நடைபெறப்போகும் ‘வெல்லும் தமிழ்ப்பெண்கள்’ மாநாடு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share