×
 

விஜய் வேட்டைக்கு வந்த சிங்கம் இல்ல... வேடிக்கை காட்டும் சிங்கம்! சீமான் செம கலாய்

விஜய் வேட்டைக்கு வந்த சிங்கம் இல்லை என்றும் வேடிக்கை காட்ட வந்த சிங்கம் எனவும் சீமான் விமர்சித்தார்.

நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகத்தை 2024-இல் தொடங்கியபோது, சீமான் ஆரம்பத்தில் அவருக்கு ஆதரவு தெரிவித்தார். இருப்பினும், 2024 அக்டோபர் 27-ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்ற தவெகவின் முதல் மாநில மாநாட்டில் விஜய் தனது கொள்கைகளாக திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று அறிவித்ததைத் தொடர்ந்து, சீமானின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. இந்தக் கொள்கை அறிவிப்பு, சீமானின் கடுமையான விமர்சனங்களுக்கு அடித்தளமாக அமைந்தது. சீமான், சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் பொதுக்கூட்டத்தில், விஜய்யின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தார்.

திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றாக முடியாது. நோயும் மருந்தும் ஒன்றாக முடியுமா? வில்லனும் ஹீரோவும் ஒரே ஆளாக இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பிய சீமான், விஜய்யின் கொள்கைகளை நடுநிலை அல்ல, கொடுநிலை என்று கடுமையாகச் சாடினார். மேலும், விஜய் இனி தான் அம்பேத்கர், பெரியார் குறித்து படிக்க வேண்டும். நான் அதில் பி.ஹெச்.டி பட்டம் பெற்றவன் என்று கூறி, தனது அரசியல் அனுபவத்தையும் கொள்கைத் தெளிவையும் முன்னிலைப்படுத்தினார்.

 விஜய்யும் அவரது தொண்டர்களையும் சீமான் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் தனது கொள்கை தலைவர்கள் பற்றி 10 நிமிடம் விஜய் உரையாற்றுவார் என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். ஒரு 13 ஆம் தேதி விஜய் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருக்கும் நிலையில் சீமான் இவ்வாறு தெரிவித்தார். மக்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தில் 15 நிமிடங்கள் தான் உரையாற்ற அனுமதி கேட்டுள்ளதாகவும் சங்கி என்றால் நண்பன் என பொருள் வருகிறது என்றும் திராவிடம் என்றால் திருடன் என்றே வருகிறது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெரம்பலூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி! ஆனால்... ட்விஸ்ட் வைத்த போலீஸ்

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு அடிப்படையே தெரியவில்லை என்றும் ஆண் சிங்கம் வேட்டைக்கு செல்லாது என்ற அடிப்படை கூட விஜய்க்கு தெரியவில்லை எனவும் கூறினார். விஜய் வேட்டைக்கு வந்த சிங்கம் அல்ல என்றும் வேடிக்கை காட்ட வந்த சிங்கம் என்றும் விமர்சித்த சீமான் திமுக அரசியல் எதிரி என்றால் அதிமுக அரசியல் எதிரி இல்லையா என கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: விஜய் பிரச்சாரத்திற்கு பல கெடுபிடிகள்... முடியவே முடியாது! திட்டவட்டமாக ஏற்க மறுக்கும் தவெக..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share