உட்காரும் இடத்தில் உறுத்துதா? இவங்களுக்கு எதுக்கு சுதந்திரம்.? முதல்வருக்கு சீமான் காட்டமான கேள்வி..!
புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்தார்.
தமிழக அரசு சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இது தற்போதைய புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள இடநெருக்கடியை சமாளிக்கவும், நவீன வசதிகளுடன் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கவும் எடுக்கப்பட்ட முடிவாகும். முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்த இந்த திட்டம் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாக்கப்பட உள்ளது. இதற்காக பட்டினப்பாக்கத்தில் உள்ள ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் சுமார் 25 முதல் 26 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலம் பெரும்பாலும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறைக்கு சொந்தமானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 மாடிகள் கொண்ட முதன்மை கட்டிடத்துடன் இந்த வளாகம் வடிவமைக்கப்படும் என்றும், இதற்காக கட்டிடக்கலை ஆலோசனை நிறுவனங்களை தேர்வு செய்யும் குழுக்கள் உள்ளிட்ட மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த அறிவிப்பு வெளியான உடனேயே எதிர்க்கட்சிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் விவகாரத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது உள்ள தலைமைச் செயலகத்தில் என்ன பிரச்னை உள்ளது என்று கேட்டார். உட்காரும் இடத்தில் ஏதேனும் உறுத்துகிறதா? அப்படி என்ன பிரச்னை? என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: நாதக வேட்பாளர்கள் யார் யார்?.. இன்று அறிவிக்கிறார் சீமான்.! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!
சட்டமன்றத்தை சினிமா மன்றமாக தவெகவினர் மாற்றி விட்டதாக விமர்சித்த சீமான், அறிவார்ந்த பெருந் தலைவர்கள் இருந்த அவை அது. அங்கே அமர்ந்துகொண்டு இவர்கள் பண்ணுவதை என்ன சொல்வது என்று தெரியவில்லை என்றார். சுதந்திரத்திற்காகப் போராடிச் செத்தவர்களை சொல்லவேண்டும் என்றும் இவர்களுக்கு எதற்கு போராட்டம் இவர்களுக்கு எதற்கு சுதந்திரம் என்று தோன்றுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: இடைத்தேர்தலில் களமிறங்கும் நாதக..! வேட்பாளர் பட்டியலை வெளியிடும் சீமான்..!! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!!