×
 

விஜய் பற்றி பேசிய சீமான்... என்ட்ரி கொடுத்த போலீஸ்! பிரஸ்மீட்டில் பரபரப்பு...!

சீமான் செய்தியாளர் சந்திப்பின்போது போலீஸ் குறுக்கிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் போது சீமான் ஆதரவு தெரிவித்து இருந்தார். காலப்போக்கில் தொடர்ந்து பல விமர்சனங்களை விஜய் மீது சீமான் வைத்து வருகிறார். தமிழ் தேசியமும் திராவிடமும் இணைந்த ஒரு அரசியல் கோட்பாட்டை விஜய் அறிவித்ததில் இருந்து சீமான் தனது விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்தார். கரூர் சம்பவத்தில் தமிழக வெற்றி கழகம் துவண்டு போனது. தற்போது மெல்ல மீண்டு எழுந்து வரும் நிலையில் கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் இன்று மாமல்லபுரத்தில் தனித்தனியாக சந்தித்து பேசுகிறார். 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். விஜய் அரசியல் குறித்து மறைமுகமாக விவரித்தார். கலையைப் போற்ற வேண்டியது தான்., கலைஞர்களை கொண்டாட வேண்டியதுதான்., ஆனால், நடித்துவிட்டால் போதும் நாட்டை ஆளும் திறமை வந்துவிடும் என மக்கள் கருதினால், கொடூர போக்காக மாறிவிடும் என்று கூறினார்.

அறிவார்ந்த சமூகம் கற்று தேர்ந்து விடும் என நினைக்கும் போது எதிர்கால தலைமுறை எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை நினைக்கும் போது நடுக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். நடித்தால் நோட்டை கொடுப்போம், நடிப்பதை நிறுத்தினால் நாட்டைக் கொடுப்போம் என்பதை தமிழ் சமூகம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். திரை கவர்ச்சியில் மூழ்கி இருக்கும் இளம் தலைமுறை விழிப்புணர்வோடு மீண்டு எழ வேண்டும் என்று கூறினார்.

இதையும் படிங்க: கல்வியில் சிறந்த தமிழ்நாடா? எதுக்கு இந்த வீண் பெருமை... சீமான் காட்டம்..!

சீமான் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த போதே போலீசார் என்ட்ரி கொடுத்து வேறு இடத்தில் நிற்குமாறு கூறினர். ஒரே நிமிடம் இருங்கள் நீங்கள் பேசுவதற்குள் நானே பேசி முடித்து விடுவேன் என்று சீமான் தெரிவித்தார். இதனால் சீமான் செய்தியாளர் சந்திப்பின்போது சலசலப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: தோத்ததுல கூட இவ்வளவு பெருமையா? - 134 தொகுதிகளில் மீண்டும் ரிஸ்க் எடுக்கும் சீமான்... அவரே சொன்ன முக்கிய தகவல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share