×
 

விஜய் அரசியலுக்கு வரணும்னு சொன்னேன்தான்! அதுக்காக இப்படியா? சீமான் பரபரப்பு பிரஸ்மிட்...!

விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறினேன் தான் அதற்காக இப்படியா என சீமான் கேள்வி எழுப்பினார்.

விஜய் தமிழக வெற்றி கழகத்தை ஆரம்பித்தபோது சீமான் தனது ஆதரவை தெரிவித்து வந்தார். ஆனால் கடந்த சில நாட்களாக விஜய்யை சீமான் கடுமையாக விமர்சித்து வருகிறார். அவரது தொண்டர்களையும் விமர்சிக்கிறார். சீமான் விஜயின் தொண்டர்களை அணில்கள் என்று கூறியதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. விஜய் மட்டும் முதலமைச்சரை அங்கிள் எனக் கூறி பேசுவது சரியா என்ற கேள்விகளையும் ஒரு பக்கம் முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, விஜய் என்னுடைய தம்பி அவருக்கு இதை பேசக்கூடாது என கூறுவேன் என தெரிவித்தார். என் உச்சத்தை விட்டு வருமானத்தை விட்டு உங்களுக்காக வந்திருக்கிறேன் என்று பேசக்கூடாது என்றும் மக்களுக்காக செய்ய வந்தால் அந்தப் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

விஜயை அரசியலுக்கு வர வேண்டும் என்று தான் கூறியது உண்மைதான் என்றும் ஆனால் அவர் எம்ஜிஆரை, அண்ணாவை தூக்கிக் கொண்டு வருவார் என யார் கண்டது என்றும் விமர்சித்தார். ஒரு கட்சியை வீழ்த்த வேண்டும் என்று பேசிக்கொண்டு, அதனை தோற்றுவித்தவரை தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம் என்றும் கோபம் வருமா வராதா எனவும் சீமான் கேள்வி எழுப்பினார். விஜயை தான் நேசிப்பதால்தான் இவற்றைக் கூறுவதாகவும் சீமான் தெரிவித்தார். விஜயை எதிர்த்து பேசினால் திமுகவின் கைக்கூலி என்கிறார்கள் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: தம்பி நீ திரும்பி வருவேன்னு நெனச்சனேடா! ரோபோ சங்கர் மறைவுக்கு சீமான் இரங்கல்

விஜய்க்கு கடவுச்சீட்டு இருக்கிறது., அவரை வைத்து படம் எடுக்க ஆட்கள் இருக்கிறார்கள் என்று கூறிய சீமான், தான் அவ்வாறு இல்லை என்றும் தனக்கு கடவு சீட்டு கூட இல்லை எனவும் நான் இன்டர்நேஷனல் டெரரிஸ்ட் என்றும் சீமான் விமர்சித்து பேசினார்.

இதையும் படிங்க: விஜயை எதிர்த்தால் திமுக கைக்கூலி! திமுகவை எதிர்த்தால் பாஜக கைக்கூலி... என்னயா உங்க நியாயம்? - சீமான்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share