×
 

மனசு வலிக்குது... தேசம் கண்டிராத உயரிய மனிதர்... வேதனையை வெளிப்படுத்திய சீமான்..!!

நல்லக்கண்ணு மறைவுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மிக மூத்த தலைவர் நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய இழப்பாக அமைந்துள்ளது. 101 வயதில், நீண்டகால உடல்நலக் குறைவுக்குப் பிறகு அவர் காலமான செய்தி பலரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக, சுதந்திரப் போராட்டத்தில் இருந்து தொடங்கி தொழிலாளர் உரிமைகள், சமூக நீதி, விவசாயிகளின் நலன் என பல தளங்களில் அயராது பாடுபட்டவர் அவர்.

அவரது வாழ்க்கை ஒரு உண்மையான போராளியின் பயணமாகவே இருந்தது. நல்லகண்ணு சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நல்லகண்ணு மறைவு பேரிழப்பு என அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், மகத்தான மாமனிதர் இந்த நாடு இழந்துவிட்டதாக சீமான் கூறினார். நல்ல கனவு இழந்து விட்டோம் என்று நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது என சீமான் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காணாமல் போன மீனவர்கள்... கண்டுக் கொள்ளாத அரசுகள்..!! நடவடிக்கை எடுக்க சீமான் வலியுறுத்தல்..!!

நல்லகண்ணு உடலுக்கு அரசு மரியாதை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். தன் உடலைக் கூட கொடையாக கொடுத்தவர் நல்லகண்ணு என்றும் சொல்லிதான் அரசு மரியாதை கொடுக்க வேண்டும் என்று இல்லை என்றும் கூறினார். 

இதையும் படிங்க: ஒரே நாடு, ஒரே வரி, ஒரே ரேசன் கார்டு... ஆனால்...? - மத்திய, மாநில அரசுகளை கிழித்துத் தொங்கவிட்ட சீமான்....!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share