விஜயகாந்த், சிரஞ்சீவி நிலைமை தான் விஜய்க்கும்! செல்வப்பெருந்தகை விமர்சனம்..!!
சிரஞ்சீவிக்கும் விஜயகாந்துக்கும் ஏற்பட்ட நிலைமை தான் விஜய்க்கும் என செல்வ பெருந்தகை தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் இரண்டாவது மாநில மாநாட்டில் நடத்தினார். மதுரை மாவட்டம் பாரப்பதில் நடைபெற்ற இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கமாகக் கொண்டு தமிழக வெற்றி கழகம் செயல்பட்டு வருகிறது. விஜய்க்கு தான் மக்களின் ஆதரவு இருப்பதாக பேசப்பட்டு வருவது விமர்சனத்துக்கும் உள்ளானது. ஆனால் விஜய் அரசியலுக்கு அப்பாற்பட்டு தரம் தாழ்ந்து பேசுகிறார் என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் விஜயின் அரசியல் பிரவேசம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது விஜயகாந்திற்கும் சிரஞ்சீவிக்கும் ஏற்பட்ட நிலைமை தான் விஜய்க்கும் என தெரிவித்தார். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து பத்து விழுக்காட்டிற்கு மேல் வாக்குகள் பெற்றதாகவும், விருதாச்சலத்தில் தான் எம்எல்ஏவாக அவர் ஆனதாகவும் தெரிவித்தார்.
10 சதவீதத்திற்கும் மேல் வாக்கு பெற்ற கட்சி என்று எப்படி இருக்கிறது என்பதை நம்மால் பார்க்க முடியும் என்றும் நல்ல சித்தாந்தம் நல்ல கருத்துக்களை பேசினார். யாரையும் அவர் வசைப்படவில்லை என்று தெரிவித்தார். இதேபோல் சிரஞ்சீவியும் கட்சி தொடங்கியதாகவும் இருபது லட்சம் பேர் கலந்து கொண்டதாகவும் சொன்னார்கள்.,
இதையும் படிங்க: நீங்கா நினைவில் வாழும் அண்ணன் விஜயகாந்திற்கு பிறந்தநாள்! வாழ்த்துகளை பகிர்ந்த விஜய்..!
கடைசியில் என்ன ஆனது காங்கிரஸ் உடன் இணைந்து விட்டார்கள் என்று தெரிவித்தார். இப்போது அந்த கட்சி இருக்கிறதா என்றால் அந்தக் கட்சியை இல்லை எனவும் இதே போல் பல கட்சிகளை சொல்லலாம் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: அப்பாடா விஜயை பார்த்தாச்சு! கொத்து கொத்தாக கலையும் கூட்டம்... காலியாகும் திடல்