×
 

யாரு வற்புறுத்தினாங்க..? எதாச்சு சொல்லின்னு இருக்காதீங்க..! Ex. அமைச்சர் பேச்சுக்கு செங்கோட்டையன் COUNTER..!!

அனிதா ராதாகிருஷ்ணன் வைத்த முக்கிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம், திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் அளித்த பேட்டியில், தன்னை ராஜினாமா செய்ய வற்புறுத்தியதாகவும், தவெகவில் சேருமாறு அழுத்தம் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டினார். இதற்கு அதிமுகவில் இருந்து தவெகவுக்கு வந்த அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது பதிலை அளித்தார். 

ஜூன் 20, 2026 அன்று ஆத்தூரில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய உரை தான் இந்த வழக்குக்கு முக்கிய காரணம். அந்த உரையில் முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை தொடர்பான விவகாரங்களை ஒருமையில் குறிப்பிட்டு அவதூறாக பேசியதாக தவெக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். முன்ஜாமீன் கோரிய அவரது மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஜூலை 3 அன்று தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பேரூராட்சிக்கு ஆய்வுக்கு சென்றபோது அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்டபோது போலீஸ் வாகனத்தில் ஏற்றப்படும் வேளையில் அனிதா ராதாகிருஷ்ணன், “என்னை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி வற்புறுத்தினார்கள். தவெகவில் சேருமாறு அழுத்தம் கொடுத்தார்கள். நான் மறுத்ததால் என்னை கைது செய்துள்ளனர். என் தலைவர் ஸ்டாலின் தான். நான் தி.மு.க.விலேயே இருப்பேன்” என்று கூறினார். 

இதையும் படிங்க: முதல்வர் விஜய், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 55 எம்.எல்.ஏ.க்கள் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

இந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் அளித்த பேட்டியில் தெளிவான பதில் அளித்தார். “அனிதா ராதாகிருஷ்ணனை ராஜினாமா செய்யுங்கள் என யாரும் வற்புறுத்தவில்லை. ஏதோ சொல்ல வேண்டும் என்று அவர் சொல்லியிருக்கிறார்” என்று கூறினார். மேலும், “சிறந்த ஆட்சி நடத்த வேண்டும் என்பதே முதல்வரின் விருப்பம்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அனிதா ராதாகிருஷ்ணன் தனது பேச்சில் யார் வற்புறுத்தினார்கள் என்பதை தெளிவாகக் கூறவில்லை என்பதையும் செங்கோட்டையன் சுட்டிக்காட்டினார். 

இதையும் படிங்க: 20 நாட்களில் என்ன சட்டம் ஒழுங்கு பிரச்சினை? விமர்சனங்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் ஆவேசம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share