×
 

பத்து ரூபா பாலாஜி… CBI வந்தா CONDITIONS FOLLOW பண்ணுவீங்களா? கிண்டலடித்த அதிமுக…!

சிபிஐ வந்தால் செந்தில் பாலாஜி கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணுவாரா என அதிமுக கிண்டல் அடித்துள்ளது.

கரூர் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்தார். அப்போது, விஜய்க்கு சரமாரி கேள்விகளை முன் வைத்தார். அதிமுக ஆட்சியிலும் டாஸ்மாக்கில் கூடுதலாக பத்து ரூபாய் கூறினார். இந்த நிலையில், பத்து ரூபாய் பாலாஜி பதறுவது ஏன் என அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது. கரூர் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்திருக்கிறோம் என்று திமுக அரசு அறிவித்த பிறகு, EB அதிகாரி, மாவட்ட ஆட்சியர், சட்டம் ஒழுங்கு ADGP ஆகியோர் பிரஸ் மீட் நடத்துகின்றனர் என்றும் டிஜிபி பிரஸ் மீட் நடத்துகிறார் எனவும் முதல்வர் வீடியோ வெளியிடுகிறார் என்றும் வருவாய்ச் செயலாளர், மருத்துவத்துறைச் செயலாளர், டிஜிபி, ஏடிஜிபி ஆகியோர் கூட்டாக பிரஸ் மீட் நடத்துகின்றனர் என்றும் இப்போது செந்தில் பாலாஜி செய்தியாளர் சந்திப்பு நடத்தி இருப்பதாகவும் கூறியுள்ளது. 

இவ்ளோ பதட்டப்பட்டு என்ன சொல்ல வர்றீங்க திமுக என கேள்வி எழுப்பியது. எடப்பாடி பழனிச்சாமி சொன்னதுபோல், விசாரணை ஆணையத்தை அரசுக்கு வேண்டிய திசையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறீர்களா என்றும் அரசியல் செய்யாதீர், அரசியல் செய்யாதீர் என்று எல்லா அரசியலையும் செய்துக் கொண்டிருப்பது யார்? திமுக தானே எனவும் கேள்வி எழுப்பியது.

உங்கள் பதட்டம் தான் உண்மையிலேயே கரூரில் நடந்தது என்ன என்ற கேள்வியை, சந்தேகத்தை வலுக்கச் செய்கிறது என்றும் ஒரு விசாரணை ஆணையம் அமைத்த பிறகு, அது தொடர்பான வாதங்களையோ, காணொளிகளையோ அரசு அதிகாரிகள், அரசைச் சார்ந்தோர் பொதுவெளியில் வெளியிட்டு, ஆணையத்தின் நிர்ணயங்களை அவமதித்துள்ளீர்கள். இது நீதிமன்ற அவமதிப்புக்கு சமம் என்றும் கூறி உள்ளது.

இதையும் படிங்க: ஆயிரம் செருப்பு கெடந்துச்சு… ஒரு தண்ணி பாட்டில் இருந்துச்சா? இதான் விஷயம்… செந்தில் பாலாஜி விளாசல்…!

அஇஅதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளில் எந்த புகார் வந்தாலும் அதற்கு நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம் எனவும் எங்கோ ஒரு இடத்தில் நடந்த, சட்டவிரோத விற்பனை முதல் சந்து விற்பனை வரை அனைத்து புகார்களுக்கும், புகார் எழுந்த உடன், 8000-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிந்துள்ளோம் எனவும் ஆனால், திமுக ஆட்சியில் Senthil Balaji Model Institutionalised Robbery நிறுவனமயமாக்கப்பட்டக் கொள்ளை நிகழ்ந்ததாகவும் விமர்சித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள எல்லா TASMAC கடைகளிலும், பாட்டிலுக்கு மேல் ரூ.10 முதல் ரூ.40 வரை கணக்கே இல்லாமல் கொள்ளை அடித்து, இப்போது பாட்டில் மேல் 10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டி வசூல் செய்யும் அளவிற்கு பகல் கொள்ளை அடித்துவிட்டு, அதை Open ஆகப் பேசுகிறேன் என்று சொல்லி Justify செய்ய பத்து ரூபாய் பாலாஜிக்கு வெட்கமாக இல்லையா என்றும் இதுவரை 168 தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 120-க்கும் மேற்பட்ட தொகுதிகளில், பத்து ரூபாய் என்று எடப்பாடி பழனிச்சாமி வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றி உள்ளதாகவும் கூறியது. 

கரூர் சம்பவத்தை மடைமாற்றும் அரசியல் செய்வதாகவும் ஏற்கனவே காசு வாங்கினேன் ஆனால் திரும்ப கொடுத்தேன் என்று கூறி ED வந்ததும் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி வந்து அழுவதாகவும் இந்த முறை சிபிஐ வந்தால் கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணுவீங்களா எனவும் கேள்வி எழுப்பபட்டிருந்தது. அதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியையும் டேக் செய்துள்ளன. 

இதையும் படிங்க: ஏன் LATE? எதுக்கு உள்ள போனீங்க? விஜய்க்கு செந்தில் பாலாஜி சரமாரி கேள்வி…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share