உயிர்கள் போயிருக்கு... அரசியலாக்காதீங்க! செந்தில் பாலாஜி பரபரப்பு பேட்டி...!
கரூர் சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தினார்.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உற்சாகத்துடன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தார். கரூரில் சுற்றுப்பயணம் செய்த விஜய் உற்சாகத்துடன் வரவேற்க காத்திருந்தனர். தொண்டர்களின் இந்த உற்சாகம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை. இந்த பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கரூர் திமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார். அனைத்து உதவிகளையும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கும் தனது இரங்கலை தெரிவித்தார். கடந்த 27 ஆம் தேதி கரூரில் நடந்த துயரச்சம்பவம் கொடுமையானது என்றும் கூறினார். கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது என கூறிய செந்தில் பாலாஜி, கரூரில் நடக்காத மிகப்பெரிய துயரச்சம்பவம் நிகழ்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
யாராலும் எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத நிகழ்வு என்றும் கடந்த மூன்று நாட்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண குணமடைந்து விடு திரும்ப வேண்டும் என்று வேண்டுவதாக கூறினார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜியை டார்கெட் செய்கிறாரா விஜய்? திருமா கடும் தாக்கு...!
அனைவருக்குமான பொது நபராக மக்களின் அன்பை பெற்றுள்ளேன் என்றும் தனது பயணம் குறித்து பேசினார். தற்போதைய நிலவரப்படி ஏழு பேர் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவத்தை அரசியலாக பார்க்க விரும்பவில்லை என்றும் கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தோடு தான் தொடர்ந்த தொடர்பில் இருப்பதாக கூறினார். லைட் ஹவுஸ் கார்னரில் அதிகபட்சமாக 7000 பேர் தான் நிற்க முடியும் என்றும் எவ்வளவு பேர் வருவார்கள் என்பதை முடிவு செய்ய வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி மேல சந்தேகம் வரவே கூடாதா? பெலிக்ஸ் கைது சம்பவத்தை கண்டித்த காயத்ரி ரகுராம்...!