×
 

இன்போசிஸ் தலையில் இறங்கியது இடி... நாராயண மூர்த்திக்கு சம்மட்டி அடி...!

இன்போசிஸ் நிறுவனத்திற்கு 66 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனமான இன்போசிஸுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் மிகப்பெரிய அபராதம் விதித்துள்ளது. 

வரிகளை நிர்வகிக்கும் மற்றும் வசூலிக்கும் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம், “ஏப்ரல் 2025 முதல் ஜூன் 2025 வரையிலான காலத்திற்கான சிங்கப்பூர் ஜிஎஸ்டி கட்டணம்” தொடர்பான 97,035.9 சிங்கப்பூர் டாலர் அபராதம் விதித்துள்ளது. 

ஆனால் அபராதம் விதிக்கப்பட்டதால் நிறுவனத்தின் நிதி, செயல்பாடுகள் அல்லது பிற செயல்பாடுகளில் எந்தவிதமான தாக்கமும் இல்லை என இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: “அவமானமா இல்ல, அமித்ஷாவே சிரிப்பா சிரிப்பாரு” - ஆளுநர் ஆர்.என்.ரவியை பங்கமாய் கலாய்த்த கே.என்.நேரு...!

இன்போசிஸுக்கு இந்த ஆண்டின் முதல் காலாண்டு சிறப்பானதாக அமையவில்லை. ஜூன் காலாண்டு அறிக்கையில் இன்போசிஸின் நிகர நிகர லாபம் ரூ.6,921 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய காலாண்டை விட 1.6 சதவீதம் சரிவாகும். அதே நேரத்தில் வருவாய் தொடர்ச்சியாக 3.3% அதிகரித்து ரூ.42,279 கோடியாக இருந்தது.

இந்த காலகட்டத்தில் மொத்தம் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர் ஒப்பந்த வெற்றிகளால் நிறுவனம் ஊக்கமளித்தது. நிறுவனம் அதன் முழு ஆண்டு வருவாய் வளர்ச்சி வழிகாட்டுதலின் கீழ் இறுதியில் 1% ஆக திருத்தப்பட்டது, இது பூஜ்ஜிய வளர்ச்சி என்ற முந்தைய கணிப்பில் இருந்து அதிகரித்துள்ளது. இதனால் தான் அபராதம் விதிக்கப்பட்டாலும் நிறுவனத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என இன்போசிஸ் தெரிவித்துள்ளது. 

அதேபோல் ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு AI தலைமையிலான கிளவுட் மற்றும் டிஜிட்டல் உருமாற்றத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு கூட்டு முயற்சியை உருவாக்க, டெல்ஸ்ட்ரா குழுமத்தின் முழு உரிமையாளரான வெர்சென்ட் குழுமத்தின் 75 சதவீத பங்குகளை இன்ஃபோசிஸ் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: நள்ளிரவில் தூய்மை பணியாளர்களை கைது செய்தது ஏன்? - அமைச்சர் தங்கம் தென்னரசு பரபர பதில்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share