×
 

கொரோனாவால் ஹார்ட் அட்டாக் ஏற்படுமா? அதிர்ச்சி தந்த ஐஐடி ஆய்வு!!

டெல்டா வகை கொரோனா குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளது. சென்னையில் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார். இதனால் மக்கள் மத்தியில் மீண்டும் கொரோனா குறித்த அச்சம் பரவி வருகிறது. இந்தியாவில் வைரஸ் பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. தென் மாநிலங்களில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்தூரில் உள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் கொரோனா குறித்த நடத்திய ஆய்வில் சில அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளன.

இந்த ஆய்வில், டெல்டா கொரோனாவால் சைலண்ட் மாரடைப்பு ஏற்படுவது தெரிய வந்துள்ளது. இது மட்டுமின்றி டெல்டா கொரோனாவால் தைராய்ட் பாதிப்பும் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஏற்படுத்தும் இதர உடல்நல சிக்கல்கள் குறித்தும் இதில் பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வகை கொரோனாவும் மனித உடலில் என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிவதே இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ஐசிஎம்ஆர்) இணைந்து நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முக்கிய நோக்கம்.

இதையும் படிங்க: சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி! பொதுமக்கள் கலக்கம்...

புரோட்டியோம் ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகள் கொரோனா குறித்த புரிதலை அதிகரிக்கிறது. மேலும், அதற்கு எந்த மாதிரியான சிகிச்சை சரியாக இருக்கும் என்பது குறித்தும் தெளிவான பிம்பத்தை அளிக்கிறது. ஒட்டுமொத்தமாக 3,134 நோயாளிகளின் டேட்டாக்களை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் மற்றும் இரண்டாம் அலையில் பாதிக்கப்பட்ட 3,134 நோயாளிகளின் டேட்டாவை வைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. கொரோனாவின் C-ரியாக்டிவ் புரதம், ஃபெரிடின், D-டைமர், ரத்த அணுக்களின் எண்ணிக்கை, சிறுநீரக செயல்பாட்டு என அனைத்து குறித்தும் விரிவான ஆய்வை நடத்தியுள்ளனர்.

அதில் இந்தியாவில் அதீத பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனாவே உடலின் பயோகெமிக்கல் பேலன்ஸை அதிகம் பாதிப்பது தெரிய வந்துள்ளது. சைலண்ட் மாரடைப்பு மட்டுமின்றி தைராய்டு பிரச்சினையை ஏற்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. டெல்டா மாறுபாடு உடலின் உயிர்வேதியியல் சமநிலையில் மிகவும் குறிப்பிடத்தக்க இடையூற்றை ஏற்படுத்தியது, இது கேட்டகோலமைன் மற்றும் தைராய்டு ஹார்மோன் உற்பத்தியைப் பாதித்து, அமைதியான இதய செயலிழப்பு மற்றும் தைராய்டு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: BE ALERT.. மீண்டும் அச்சுறுத்த தயாராகும் கொரோனா.. கர்நாடகாவில் சித்தராமையா ஸ்மார்ட் மூவ்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share