×
 

தலைக்கேறிய இனவெறி... கதவை உடைத்துக்கொண்டு நுழைந்த காமூகன்... இங்கிலாந்தில் சீக்கியப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்...!

இனவெறித் தாக்குதலில் 20 வயது இந்திய வம்சாவளி பெண் ஒருவர் இங்கிலாந்தைச் சேர்ந்த வெள்ளையரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். 

வடக்கு இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் ஒரு கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. இனவெறித் தாக்குதலில் 20 வயது இந்திய வம்சாவளி பெண் ஒருவர் இங்கிலாந்தைச் சேர்ந்த வெள்ளையரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். 

இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பெண் இங்கிலாந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் வெளிநாடு வாழ் இந்தியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரிட்டனில் இந்திய வம்சாவளி பெண்கள் மீதான இனவெறி பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம் சீக்கியப் பெண் ஒருவர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

வெஸ்ட் மிட்லாண்ட்ஸின் வால்சால் பகுதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவரை இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக 

இதையும் படிங்க: “வலிக்குது... என்னை விட்டுடுங்க தாத்தா...” - 10 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 64 வயது முதியவர்...!

வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்ய தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில், 30 வயதுடைய வெள்ளையர் ஒருவர் குற்றவாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சேகரிக்கப்பட்ட காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபரை அடையாளம் காண தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. சந்தேக நபர் விரைவில் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் காவல்துறை அதிகாரிகள் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். தற்போது போலீசார் சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி வீடியோக்களைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

இச்சம்பவம் குறித்து இங்கிலாந்தைச் சேர்ந்த சீக்கிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்டவர் ஒரு இளம் பஞ்சாபி பெண். தாக்குதல் நடத்தியவர் அவரது வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார். இந்த மாத தொடக்கத்தில், ஓல்ட்பரி பகுதியில் ஒரு சீக்கிய பெண் இதேபோன்ற முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார் . பல UK அரசியல்வாதிகள் மற்றும் சிவில் உரிமைகள் தலைவர்கள் இளம் இந்திய பெண்கள் மீதான இந்த தாக்குதல்களை கடுமையாக கண்டிக்கின்றனர். சிறுபான்மை சமூகங்களைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக குறிப்பிட்டுள்ளது. 

இதையும் படிங்க: அட கொடுமையே..!! இத்தன ஸ்கூல்ல ஒருத்தர் கூட சேரலையா..!! கல்வி அமைச்சகத்தின் ஷாக் ரிப்போர்ட்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share