×
 

நடிகை கொடுத்த பாலியல் புகார்!! பாலக்காடு காங்., எம்.எல்.ஏ ராகுல் சஸ்பெண்ட்.!

கேரள காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்தில் மீதான பாலியல் புகாரை தொடர்ந்து இன்று கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

கேரளாவின் பாலக்காடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மாங்கூட்டத்தில், பாலியல் குற்றச்சாட்டு புகார்களால் கட்சியில் இருந்து ஆகஸ்ட் 25, 2025-ல் ஆறு மாசத்துக்கு சஸ்பெண்ட் ஆகியிருக்கார். மலையாள நடிகை ரினி ஆன் ஜார்ஜ் உள்ளிட்ட பல பெண்கள், இவர் மேல பாலியல் தொந்தரவு புகார்களை எழுப்பியதால, இந்த சம்பவம் இப்போ கேரள அரசியல் களத்துல பெரிய பரபரப்பை கிளப்பியிருக்கு!

முன்னாள் டிவி ஜர்னலிஸ்ட் ஆக இருந்து, இப்போ நடிகையா இருக்குற ரினி ஆன் ஜார்ஜ், ஆகஸ்ட் 20-ல் ஒரு “பிரபல இளம் அரசியல் தலைவர்” தனக்கு வாட்ஸ்அப்-ல ஆபாச மெசேஜ்கள் அனுப்பி, ஹோட்டலுக்கு வர சொல்லி அழைச்சதாக ஒரு புகாரை வெளியிட்டார். அவர் நேரடியா ராகுல் பெயரை சொல்லலை, ஆனா கேரள ஊடகங்கள், அது ராகுல் மாங்கூட்டத்தில் தான்னு கண்டுபிடிச்சு செய்தி வெளியிட்டாங்க. 

இதைத் தொடர்ந்து, எழுத்தாளர் ஹனி பாஸ்கரன், ஒரு திருநங்கை ஆவந்திகா உள்ளிட்ட பல பெண்கள், ராகுல் தங்களுக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்பியதாகவும், பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் புகார் கொடுத்தாங்க. Reporter TV, ராகுல் ஒரு பெண்ணை கர்ப்பத்தை கலைக்க சொன்னதாகவும், மிரட்டல் விடுத்ததாகவும் ஒரு ஆடியோ கிளிப்பை வெளியிட்டு, விவகாரத்தை இன்னும் சூடாக்கிச்சு.

இதையும் படிங்க: 100% டிஜிட்டல் கல்வியறிவு பெற்ற முதல் மாநிலம் கேரளா.. முதல்வர் பினராயி விஜயன் பெருமிதம்..!!

இந்த புகார்கள் வந்த உடனே, காங்கிரஸ் கட்சி உடனடியா நடவடிக்கை எடுத்து, ராகுலை இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பதவியில் இருந்து ஆகஸ்ட் 21-ல் ராஜினாமா செய்ய வச்சது. ஆனா, BJP, CPI(M)-னு DYFI ஆகியவை, “ராகுல் MLA பதவியையும் ராஜினாமா செய்யணும்”னு கோரிக்கை வைச்சு, திருவனந்தபுரத்துல போராட்டம் நடத்தினாங்க. 

இந்த அழுத்தத்துக்கு மத்தியில், கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி (KPCC), ஆகஸ்ட் 25-ல் ராகுலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ஆறு மாசத்துக்கு சஸ்பெண்ட் செஞ்சது. KPCC தலைவர் சன்னி ஜோசப், “புகார்கள் சீரியஸா இருக்கு, உள்ளுக்குள்ள விசாரணை நடத்துறோம்”னு சொல்லி, இந்த முடிவை அறிவிச்சார்.

ஆனா, ராகுலை MLA பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சொல்லாம, கட்சி இப்போதைக்கு சஸ்பென்ஷனோட நிறுத்தியிருக்கு. இதுக்கு காரணம், பாலக்காடு தொகுதியில் ராகுல் கடந்த நவம்பர் 2024-ல் உபதேர்தலில் ஜெயிச்சவர்.

இப்போ ராஜினாமா செஞ்சா, 2026 மாநில தேர்தலுக்கு முன்னாடி உபதேர்தல் நடக்க வேண்டியிருக்கும். இதுல BJP-க்கு வாய்ப்பு கிடைக்கலாம்னு காங்கிரஸ் பயப்படுது. அதனால, ராகுலை சஸ்பெண்ட் செஞ்சாலும், MLA-ஆக தொடர அனுமதிச்சிருக்காங்க, ஆனா கட்சி கூட்டங்களிலோ, UDF மீட்டிங்குகளிலோ பங்கேற்க முடியாது.

ராகுல், “நான் யாரையும் தவறா நடத்தலை, இது என்னை குறி வச்சு நடக்குற சதி”னு சொல்லி, ஆவந்திகாவோட வாட்ஸ்அப் சாட்ஸ், போன் பேச்சுகளை வெளியிட்டு தன்னை பாதுகாக்க முயற்சி செஞ்சிருக்கார். ஆனா, ஆடியோ கிளிப்பில் இருக்குற குரல் தன்னுடையது இல்லைனு மறுக்காம, “வழக்கு பதிவு ஆனா பதில் சொல்றேன்”னு மட்டும் சொல்றார். இது, கட்சிக்குள்ளேயே அவருக்கு ஆதரவு குறைய காரணமாகியிருக்கு. முன்னாள் KPCC தலைவர் K. முரளிதரன், “ராகுல் இப்போ MLA-ஆக தொடரணுமா இல்லையானு அவரே முடிவு செய்யணும்”னு சொல்லியிருக்கார்.

LDF தலைவர் T.P. ராமகிருஷ்ணன், “ராகுல் ராஜினாமா செய்யாம இருக்குறது, அவரோட குற்றத்தை ஒப்புக்குற மாதிரி”னு குற்றம்சாட்டியிருக்கார். காங்கிரஸ் எம்.எல்.ஏ. உமா தாமஸ், “ராகுல் ராஜினாமா செய்யணும்”னு வலியுறுத்தினதுக்கு, அவர் மேல சைபர் தாக்குதல் நடந்ததை முரளிதரன் கண்டிச்சிருக்கார். இப்போ மாநில மகளிர் ஆணையமும், குழந்தைகள் உரிமை ஆணையமும் இந்த விவகாரத்தை எடுத்துக்கிட்டு விசாரிக்க தொடங்கியிருக்கு.

இதையும் படிங்க: தவெகவிற்கு வந்த சிக்கல்.. கடைசி நேரத்தில் காலைவாரிய ஒப்பந்ததாரர்கள்.. ஓடோடி வந்த சேட்டன்கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share